முதல் முறை.. ஜோபைடன்-ஜி ஜின்பிங் நேரில் பேச்சுவார்த்தை.. நிம்மதியடைந்த உலக நாடுகள்.. ஏன் முக்கியம்?
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முதல் முறையாக சந்தித்து 3 மணிநேரம் பேசினர். இந்த சந்திப்பின்போது தைவானுக்கு எதிரான சீனாவின் செயல்பாட்டுக்கு ஜோபைடன் கவலை தெரிவித்தார். மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தோனசியாவின் பாலி தீவில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மநாடு இன்று துவங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் ஜி20 உறுப்பு நாட்டு தலைவர்கள் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் பற்றி பேச உள்ளனர். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாலி நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜோபைடன் - ஜிஜின்பிங் சந்திப்பு
இதேபோல் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட பிற நாடுகளின் தலைவர்கள் இந்தோனேசியா சென்றுள்ளனர். இந்நிலையில் தான் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசினர். அமெரிக்க அதிபராக தேர்வான பிறகு முதல் முதலாக ஜோபைடன், ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

முக்கிய பேச்சுவார்த்தை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், தைவான் விவகாரத்தில் சீனா, அமெரிக்க நாடுகள் எதிரெதிர் நிலைப்பாடுகள் கொண்டவையாக உள்ளன. மேலும் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு எதிராக சீனாவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா-சீனா இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால் உலக நாடுகள் இந்த பேச்சுவார்த்தையை உற்று நோக்கியது.

3 மணிநேரம் பேச்சுவார்த்தை
இந்நிலையில் தான் நேற்று நடந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இடையேயான பேச்சுவார்த்தை 3 மணிநேரம் நீடித்தது. அப்போது பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். இதுதொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அணுஆயுத போருக்கு எதிர்ப்பு
காலநிலை மாற்றம், உலக பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், சுகாதார பாதுகாப்புக்காகவும் இருநாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என பேசினர். தைவான், ஜின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் குறித்து ஜோபைடன் கவலை தெரிவித்தார். அதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை இரு தலைவர்களும் கண்டித்துள்ளனர். அணு ஆயுதப் போரை ஒருபோதும் நடத்தக்கூடாது என்பதை இரு தலைவர்களும் எதிர்க்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.

ஏன் முக்கியம்?
அமெரிக்கா-சீனா இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது. தைவானை கைப்பற்ற சீனா முயலும் நிலையில் அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் உக்ரைன் பக்கம் அமெரிக்கா உள்ள நிலையில் ரஷ்யாவுடன் சீனா இருக்கிறது. இதனால் இருநாடுகளும் சில விஷயங்களில் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. தற்போது உலகளவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இருநாடுகளின் மோதல் போக்கு என்பது இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது என்பது இருநாடுகள் இடையேயான மோதல் போக்கை சற்று தணிக்கும் என கூறப்படுகிறது. இதனால் தான் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications