For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"வெறும் 6 நொடி! உக்ரைன் க்ளோஸ்.. அடுத்து டார்கெட் போலந்துதான்" ஓப்பனாக மிரட்டும் புதின் கூட்டாளி

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் போர் பல மாதங்களாகத் தொடரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் கூட்டாளி ஒருவர் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் நாட்டில் கடந்த பிப்.24ஆம் தேதி தொடங்கிய போர் 3 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. முதலில் ஒட்டுமொத்த உக்ரைன் நாட்டையும் கைப்பற்றத் திட்டம் போட்டுத் தாக்குதலை தொடங்கியது ரஷ்யா.

அதிர்ச்சி.. இளைஞரை லாரியின் முன்பு கட்டிவைத்து 3 கிமீ ஓட்டி சென்ற டிரைவர்... பதறவைக்கும் வீடியோ அதிர்ச்சி.. இளைஞரை லாரியின் முன்பு கட்டிவைத்து 3 கிமீ ஓட்டி சென்ற டிரைவர்... பதறவைக்கும் வீடியோ

பின்னர், இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சில நாட்கள் மட்டும் எவ்வித தாக்குதலும் நடக்காமல் இருந்தது. இருப்பினும், சில நாட்களிலேயே சண்டை மீண்டும் தொடங்கியது.

 ரஷ்யா தாக்குதல்

ரஷ்யா தாக்குதல்

அதன் பின்னர் ஒட்டுமொத்த உக்ரைன் நாட்டையும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் திட்டத்தை ரஷ்யா கைவிட்டது. இந்த உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததே இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர், உக்ரைன் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் குறிப்பிட்ட பிராந்தியங்களை மட்டும் குறி வைத்து ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்தது.

 போர்க் குற்றங்கள்

போர்க் குற்றங்கள்

இதன் காரணமாக அந்த குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு உக்ரைன் நாட்டில் ரஷ்யா ராணுவத்தின் போர்க் குற்றங்கள் குறித்த தகவல்களும் பகீர் கிளப்பி வருகின்றன. உக்ரைன் நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் பாலியல் அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபடுவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

 பகீர் வீடியோ

பகீர் வீடியோ

ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில், செச்சென் பிராந்திய தலைவரும் விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியுமான ரம்ஜான் கதிரோவ் போலந்துக்கு மிரட்டல் விடுக்கும் வீடியோ தான் இணையத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் உக்ரைன் பிரச்சினை முடிந்துவிட்டது என்றும் அடுத்தது போலந்து தான் என்றும் கூறுவதை ரம்ஜான் கதிரோவ் பேசுவது தெளிவாகப் பதிவாகி உள்ளது.

 அடுத்து போலாந்து

அடுத்து போலாந்து

இணையத்தில் வேகமாகப் பரவும் அந்த வீடியோவில், "உக்ரைனுக்குப் பிறகு, எங்களுக்குக் கட்டளை வழங்கப்பட்டால், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்ட வெறும் 6 நொடிகள் போதும். உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகள் உடனடியாக அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்போது உக்ரைன் நாட்டில் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்து போலந்து தான்" என்று மிரட்டும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

முன்னதாக இம்மாத தொடக்கத்தில் இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றியை நினைவுகூரும் வெற்றி நாளில் போலந்திற்கான ரஷ்யத் தூதர் சிவப்பு நிற மை வீசத் தாக்கப்பட்டார். இதை.டுத்து தூதர் செர்ஜி ஆண்ட்ரீவ் மற்றும் அவரது குழு அங்கிருந்து வேறு வழியின்றி வெளியேறினர். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட ரம்ஜான் கதிரோவ், ரஷ்யாவிடம் போலந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Recommended Video

    Russia-வுக்கு Bye சொன்ன Marks & Spencers! US Air Force-ன் B-21 Raider | #BitsandBytes
     யார் இந்த ரம்ஜான் கதிரோவ்

    யார் இந்த ரம்ஜான் கதிரோவ்

    ரஷ்யாவில் உள்ள குடியரசு பெற்ற பிராந்தியமாக செச்சென் உள்ளது. இந்த பிராந்தியத்தின் பூரண விடுதலைக்காகப் போராடியவர் தான் தந்தை அக்மத் கதிரோவ். ஆனால், அவர் உயிரிழந்த சில ஆண்டுகளில் அவரது மகனான ரம்ஜான் கதிரோவ் ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். உக்ரைன் போர் தொடங்கிய உடனேயே இந்த ரம்ஜான் கதிரோவ், அதை முழுவதுமாக வரவேற்றார். மேலும், உடனடியாக அங்குப் படைகளையும் அனுப்பினார். ரஷ்ய அதிபர் புதினின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவராக இவரும் அறியப்படுகிறார்.

    English summary
    Video of Chechen leader and Vladimir Putin's ally Ramzan Kadyrov is seen in a video threatening Poland: (போாலந்து நாட்டிற்கு எதிராகப் பாயத் தயாராகும் ரஷ்யா) Putin ally's threat speech against Poland.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X