திருட்டுத்தனமாக மோசடி செய்துவிட்டார்கள்.. மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஆப்பிள் நிறுவனம்.. காரணம் என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கடந்த சில நாட்களாக பழைய மாடல் ஆப்பிள் போன்களின் வேகம் குறைக்கப்பட்டு வந்தது. ஆப்பிள் பேட்டரியில் இருக்கும் பிரச்சனை காரணமாகவே இப்படி நடந்ததாக ஆப்பிள் நிறுவனம் கூறியிருந்தது.

ஆப்பிள் பேட்டரியில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆப்பிள் நிறுவனம்தான் இந்த வேக குறைப்பு வேலையை செய்து இருக்கிறது என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. தற்போது இந்த தவறுக்கு ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது.

இந்த வேலையை செய்வதற்காக ஆப்பிள் நிறுவனம் புதிய சாப்ட்வேர் அப்டேட் கூட செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வேகம் இல்லை

வேகம் இல்லை

ஆப்பிள் 6 மற்றும் அதற்கு முந்தைய மாடல் மொபைகளின் வேகம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வந்தது. பலருக்கும் மொபைல் அடிக்கடி ஹேங் ஆனது. இன்னும் சிலருக்கு போன் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் போதே ஸ்விட்ச் ஆப் ஆகி இருக்கிறது. இதுகுறித்து பலரும் ஆப்பிள் நிறுவனத்திடம் புகார் அளித்து இருந்தனர்.

புதிய ஆப்பிள் அப்டேட்

புதிய ஆப்பிள் அப்டேட்

ஆப்பிள் போன் பேட்டரியில் இருக்கும் பிரச்சனை காரணமாகவே இப்படி நடந்ததாக கூறப்பட்டு இருக்கிறது. இதனால் ஆப்பிள் அப்டேட் ஒன்றை வெளியிட்டது. இதன் மூலம் மொபைல் பேட்டரி சரியாக வேலை செய்கிறதா என பார்க்க முடியும். இந்த சாப்ட்வேர், பேட்டரி சரியில்லை என்று கூறியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக பேட்டரி மாற்றி இருக்கிறார்கள்.

மோசடி செய்து விட்டார்கள்

மோசடி செய்து விட்டார்கள்

இதற்காக ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் பேட்டரி விற்றது. ஆனால் ஆப்பிள் வேண்டும் என்றே மொபைலின் வேகத்தை குறைத்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய ஆப்பிள் மாடல்களை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக ஆப்பிள் இந்த வேலையை செய்து இருக்கிறது. ஆப்பிள் பேட்டரிகளில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்டனர்

மன்னிப்பு கேட்டனர்

தற்போது இந்த பிரச்சனையால் ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது. மொபைலின் வேகம் குறைந்ததற்கு பின் எந்த உள்நோக்கமும் இல்லை, உண்மையிலேயே பேட்டரில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. எங்களுக்கு மக்கள் தான் முக்கியம். இந்த பிரச்சனை காரணமாக அனைவரிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Apple apologies for slowing down old I Phone model mobile phones. It says that ''We don't have any wrong intention. We always loyal to our customers. It also says that we will gain back our loyalty from customers.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற