For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா: வில்லங்கமாக சிக்கிய அணில்களை மீட்ட மறுவாழ்வு மையம்

By BBC News தமிழ்
|

வால்கள் ஆபத்தான முறையில் பின்னி பிணைந்திருந்த 5 சாம்பல் நிற அணில் குட்டிகளை அமெரிக்க வனவிலங்கு மையம் ஒன்று காப்பாற்றியுள்ளது.

தாய் அணிலால் கூடு கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட புல் மற்றும் பிளாஸ்டிக் கீற்றுகளோடு இந்த அணில் குட்டிகளின் வால்கள் பின்னி பிணைந்து, ஒன்றுக்கொன்று விலகிச் செல்ல முடியாத அளவுக்கு முடிச்சி விழுந்திருந்தது.

இந்த அணில் குட்டிகள் விஸ்கான்சின் மனிதவள சங்கத்தின் வனவிலங்கு மறுவாழ்வு மையத்திடம் வழங்கப்பட, இந்த மையம் அவற்றின் வால்களை பத்திரமாக பிரித்து எடுத்து அவற்றின் உயிரை காப்பாற்றியுள்ளது.

மயக்க மருந்து வழங்கப்பட்ட நிலையில், இந்த 5 அணில் குட்டிகளின் வால்களிலும் பின்னி பிணைந்திருந்த கீற்றுகளை கத்தரியால் வெட்டி அவற்றை விடுவித்துள்ளனர்.

தங்களின் சமநிலைக்கும், தங்களை வெப்பமாக வைத்து கொள்ளவும் அணில்களுக்கு வால் மிகவும் முக்கியமானது என்று இந்த வனவிலங்கு மறுவாழ்வு மையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்கள் பின்னி பிணைந்து கொண்டதால், அவற்றில் ரத்த ஓட்டம் நின்றுபோய் திசுக்களில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 நிமிட போராட்டத்திற்கு பின்னர்தான் இந்த அணில் குட்டிகளை விடுவிக்க முடிந்தது என்றால், அந்த முடிச்சியால் ஏற்படும் ஆபத்து எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம்.

விரைவில் அவற்றை காட்டில் விட்டுவிடவுள்ளதாக இந்த மறுவாழ்வு மையம் தெரிவித்துள்ளது.

https://www.youtube.com/watch?v=9ah1igL16wE

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
A US wildlife centre has saved five young grey squirrels after their tails became dangerously fused together.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X