For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனிதமே இல்லாத மனிதவெடிகுண்டால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் 8 வயது பேரன் பலி! சோகத்தில் வங்கதேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை தொடர் குன்டுவெடிப்புகள்: வங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது- வீடியோ

    டாக்கா: இலங்கை குண்டுவெடிப்பில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் 8 வயது பேரன் பலியாகிவிட்டார்.

    இலங்கையில் ஈஸ்டர் திருநாளான ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமானோர் பிரார்த்தனை செய்ய அங்கு கூடினர். அது போல் ஈஸ்டர் கொண்டாட்டத்துக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

    இந்த நிலையில் 3 தேவாலயங்களிலும் 4 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 310 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஐஎஸ்ஐஎஸ்-ஸை ஊக்குவிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை தேவை.. நாராயணசாமி ஐஎஸ்ஐஎஸ்-ஸை ஊக்குவிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை தேவை.. நாராயணசாமி

    சகோதரரின் பேரன்

    சகோதரரின் பேரன்

    இந்த தீவிரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் குண்டுவெடிப்பில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரரின் பேரன் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை

    இலங்கை

    ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் சலீம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், வங்கதேசத்தை ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவரது மகள் ஷேக் சோனியா, கணவர் மஷியுல் ஹக்யு சவுத்ரி, மகன்கள் ஜயான் சவுத்ரி (8), ஜோகன் சவுத்ரி ஆகியோருடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றனர்.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    இவர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அப்போது ஹோட்டலில் கீழ்தளத்தில் உள்ள உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த மஷியுலும் ஜயானும் குண்டுவெடிப்பில் சிக்கி கொண்டனர். இவர்களில் மஷியுல் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உறுதி

    உறுதி

    ஆனால் காணாமல் போன அவரது மகன் ஜயான் பலியாகிவிட்டார். இந்த தகவலை ஷேக் சலீம் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது உடல் வங்கதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Bangladesh PM Sheikh Hasina's grand son also died in Srilanka bomb blast on Easter celebration.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X