For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வாரத்துக்கு 3 நாள் போதும்.. வாழ்க்கை சிறக்கும்.. மெக்சிகோ கோடீஸ்வரர் கார்லோஸ் தரும் யோசனை!

Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி: தற்போது உள்ள 7 நாட்கள் கொண்டது ஒரு வாரம் என்பதை மாற்றி, 3 நாட்களாக அதை சுருக்கினால், வேலைத் தரமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் தரமும் சிறக்கும் என்று மெக்சிகோவின் மிகப் பெரும் பணக்காரரான கார்லோஸ் ஸ்லிம் யோசனை தெரிவித்துள்ளார்.

இந்த 3 நாள் வார முறையைக் கொண்டு வந்தால் நீண்ட நேரம் வேலை பாய்த்து ஓய்ந்து போகும் அவல நிலை மாறும். வேலையை சிறப்பாக செய்ய முடியும். உற்பத்தியையும் பெருக்க முடியும், வாழ்க்கைத் தரமும் சிறப்பாக இருக்கும் என்பது அவரது கருத்து.

பராகுவே நாட்டில் நடந்த வர்த்தக மாநாடு ஒன்றில் பேசுகையில் இந்தக் கருத்தை அவர் முன்வைத்தார். அவரது பேச்சிலிருந்து...

குடும்பத்துக்கு நிறைய நேரம் கிடைக்கும்

குடும்பத்துக்கு நிறைய நேரம் கிடைக்கும்

இந்த 3 நாள் வார திட்டத்தால், நாம் நம்மை ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ளவும், குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவழிக்கவம் வழி ஏற்படும்.

ஜாலியாக வேலை பார்க்கலாம்

ஜாலியாக வேலை பார்க்கலாம்

மேலும் வேலையிலும் நாட்டம் அதிகரிக்கும். ஓய்வு நிறைய கிடைப்பதால் புத்துணர்ச்சியுடன் வேலையில் ஈடுபட முடியும். ஊழியர்களும் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள்.

ஒரு நாளைக்கு 11 மணி நேரம்

ஒரு நாளைக்கு 11 மணி நேரம்

மேலும் போதிய அளவு அனைவருக்கும் ஓய்வு கிடைப்பதால் தினசரி பணி நேரத்தை தற்போது உள்ள 8 மணி நேரம் என்பதிலிருந்து 10 முதல் 11 மணி நேரமாக மாற்றவும் முடியும்.

ஓய்வு வயதை அதிகரிக்கலாம்

ஓய்வு வயதை அதிகரிக்கலாம்

அதேபோல ஓய்வு வயதையும் 70 அல்லது 75 ஆக அதிகரிக்கலாம். இதன் மூலம் நீண்ட காலத்திற்குப் பணி புரியும் வாய்ப்பும் கிடைக்கும்.

வாரத்திற்கு 4 நாள் வேலை போதும்

வாரத்திற்கு 4 நாள் வேலை போதும்

என்னைக் கேட்டால் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை பார்த்தால் போதுமானது. அதுவே நம்மை உற்சாகமாகவும் வைத்திருக்கும் என்றார் ஸ்லிம்.

உலகின் இரு பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர்

உலகின் இரு பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர்

உலகின் இரு பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் ஸ்லிம். இவர் டெலிமெக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

டெலிமெக்ஸில் அறிமுகம்

டெலிமெக்ஸில் அறிமுகம்

தற்போது டெலிமெக்ஸ் நிறுவனத்தில், இவரது யோசனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது ஒருவர் சீக்கிரமே ஓய்வு பெற விரும்பினால் தாராளமாக ஓய்வு பெறலாம். அவருக்கு உரிய பலன்கள் அளிக்கப்படும். அதேபோல ஓய்வுக் காலத்திற்குப் பின்னரும் பணியாற்ற விரும்பினால் தாராளமாக பணியாற்றலாம். அவர்களுக்கும் முழுச் சம்பளம் தரப்படும். அதேசமயம் அவர்களுக்கு வேலைப் பளு குறைக்கப்படும். வாரம் 4 நாட்கள் மட்டுமே வேலை.

80 பில்லியன் சொத்து

80 பில்லியன் சொத்து

ஸ்லிம்மின் சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பில் கேட்ஸுக்கும் இதே அளவில்தான் சொத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கார்லோஸ் ஐடியா ஸ்லிம்மாகவே உள்ளது... வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

English summary
Mexican billionaire tycoon, Carlos Slim, has called for the introduction of a three-day working week, offset by longer hours and a later retirement, as a way to improve people’s quality of life and create a more productive labour force. Slim made the comments when speaking to a business conference in Paraguay, suggesting that the workforce could be spread over a full week, with employees working up to 10 or 11 hours a day. “With three work days a week, we would have more time to relax; for quality of life,” the Financial Times reports Slim saying.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X