நான் ஒரு "யூதனாக" இஸ்ரேலுக்கு ஓடி வந்தேன்... பெஞ்சமின் நெதன்யாகுவிடம் சொன்ன அமெரிக்க "பிளிங்கன்"

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: பாலஸ்தீன ஹமாஸ் ஜிஹாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு விரைந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டணி பிளின்கன் (ஆன்டணி பிளிங்கன்) (ஆன்டணி ப்ளிங்கன்) தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்வதேச ஊடகங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.

பாலஸ்தீனர்கள் தங்களது தாய்நிலத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இறுதி முடிவு கட்டுவோம் என்ற முழக்கத்துடன் ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் மீது உலகம் எதிர்பாராத பெருந்தாக்குதலை நடத்தியது. ஹமாஸ் ஜிஹாதிகள் நடத்திய இந்த தாக்குதலால் இஸ்ரேல் நிலை குலைந்தது. பின்னர் சுதாரித்து கொண்ட இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

Blinken tells Netanyahu in Israel, I come before you as a Jew

பாலஸ்தீனத்தை பழி எடுக்கிறது இஸ்ரேல்: இஸ்ரேலின் பதில் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தின் காஸா, மேற்கு கரை பகுதிகளை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் புதைக்கும் வகையில் உலகம் தடை செய்த ரசாயன கொத்து குண்டுகளை கொட்டிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் குண்டுமழை மூர்க்கத்தை கண்டு உலகம் வாயடைத்து போய் நிற்கிறது.

அமெரிக்கர்கள் கதி என்ன?: இதனிடையே ஹமாஸ் தாக்குதலில் அமெரிக்கர்கள் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர்; ஹமாஸ் ஜிஹாதிகள் பிடியில் பிணைக் கைதிகளாகவும் உள்ளனர். இதனால் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இத்தனைக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை, தாம் பதவியேற்ற பின்னர் ஒருமுறை கூட வெள்ளை மாளிக்கைக்கு அழைக்காமல்தான் இருந்தார் அமெரிக்கா அதிபர் ஜோ பிடன். இப்போது அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அந்நாடும் நேரடியாக களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இஸ்ரேலில் ஆண்டன் பிளிங்கன்: இதன் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா வெளியுறவுத் துறை செயலாளர்/ அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டணி பிளிங்கன் வருகை தந்தார். இஸ்ரேல் பிரதம பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது, இஸ்ரேலுக்கு உறுதுணையா நாங்கள் நிற்கிறோம் என பிளிங்கன் கூறியிருந்தார்.

யூதனாக ஓடி வந்துள்ளேன்: அத்துடன் இல்லாமல், தாம் ஒரு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக மட்டும் இங்கு வரவில்லை. பிறப்பால் ஒரு யூதனாக ஓடி வந்திருக்கிறேன் எனவும் பிளிங்கன், நெதன்யாகுவிடம் கூறியதுதான் இப்போது பெரும் விவாதமாகி உள்ளது. இஸ்ரேலியர்கள் யூதர்கள், ஜெர்மனில் ஹிட்லரால் இனப்படுகொலைக்குள்ளானவர்கள். அப்போது நாடற்றுப் போய் பாலஸ்தீனத்தின் ஒரு மூலையில் குடியேற்றப்பட்டு இஸ்ரேல் எனும் ஒரு நாடு உருவாக்கித் தரப்பட்டது. ஆனால் இன்று அந்த இஸ்ரேலிய யூதர்கள்தான் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தையும் கபளீகரம் செய்து கொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்கிறது.

அமெரிக்காவில் யூதர்கள்: உலகம் முழுவதும் யூதர்கள் பரவி இருக்கின்றனர். அமெரிக்காவின் அரசியலிலும் யூதர்கள் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்கா எப்போதும் இஸ்ரேல் பக்கம்தா நிற்கும். அதனாலேயே அமெரிக்காவின் கோரமுகம் இஸ்ரேல் என அழைப்பதும் உண்டு.

யூதர்களுடன் ஜோ பைடன் சந்திப்பு, ஆறுதல்: தற்போதும் ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அத்தனை யூத பிரதிநிதிகளை வரிசையாக அழைத்து அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தி ஆறுதல் கூறி வருகிறார். யூதர்கள் பின்பற்றக் கூடிய ஜியோனிசக் கொள்கையை தாம் ஆதரிப்பதாகவும் தாம் ஒரு கிறிஸ்தவ ஜியோனிஸ்ட் என யூதர்களிடம் பைடன் பேசுவதும் உண்டு என்கின்றன சர்வதேச ஊடகங்கள். இப்போது அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன், பகிரங்கமாக நான் ஒரு யூதன் என தன்னுடைய யூத பூர்வோத்திரத்தை பெருமிதத்துடன் விளக்கிக் கொண்டிருப்பதுதான் விவாதமாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+