அமெரிக்காவின் கிழக்குக் கடலோரத்தை உலுக்கும் தீவிர புயல்.. மக்களுக்கு எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

புளோரிடா: அமெரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளை மிரட்டி வருகிறது "பாம் சைக்ளோன்" என்று அழைக்கப்படும் அதி தீவிர புயல். இந்தப் புயல் காரணமாக கன மழை, திடீர் வெள்ளம், பனிப் புயல் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே கிழக்குக் கடலோரப் பகுதியை சான்டி சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

Bomb cyclone makes US East Coast worried

ரோட் தீவு, மாசசூசட்ஸ், புளோரிடா, ஜார்ஜியா போன்ற பகுதிகளில் பெரு மழையும், திடீர் வெள்ளமும் தாக்கும் என்று வானிலை மையத் தகவல்கள் கூறியுள்ளன. மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மணிக்கு 60 மைல் வேகத்தில் பலத்த பேய்க்காற்று வீசும் என்றும் வானிலை முன்னறிவிப்பு எச்சரித்துள்ளது. இந்த பெரும் மழை, வெள்ளத்தால் பாஸ்டன், ரோட் தீவு, மாசசூசட்ஸ் கடற்கரை உள்ளிட்டவை கடும் பாதிப்பை சந்திக்கும் என எச்சரித்துள்ளனர்.

நியூயார்க் நகரிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தற்போது அயோவா மாகாணத்திலிருந்து மத்திய அட்லான்டிக் கடலோரம் வரை வியாபித்து நிற்கிறதாம். இந்தப் புயலால் புளோரிடா முதல் மைன் வரை கடும் பனிப்பொழிவும் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது பனிப் புயலாக இது இப்பகுதிகளை உலுக்கவுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
US' East Coast is facing a big and massive 'bomb cyclone', which is headed for the East Coast this weekend.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற