For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கையில காசே இல்ல புரோ... பீட்சா, பர்கர்தான் இன்னிக்கு ஆகாரம்... 'பாவப்பட்ட' இங்கிலாந்து மக்கள்...!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் நிலவும் கடுமையான நிதிநெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் பழம், காய்கறி போன்ற ஆரோக்கிய உணவுகளை விடுத்து பீட்சா, பர்கர் போன்ற உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியுள்ளாதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

நம்மூரில் காசு நிறைய இருந்தால் மட்டும் பீட்சா, பர்கர் போன்றவற்றைச் சாப்பிட செல்வார்கள். ஆனால், ஐரோப்பிய நாடுகளிலோ பழங்கள், காய்கறிகளை ஒப்பிடும் போது அங்கு ஜங்க் புட் எனப்படும் பீட்சா, பர்கரின் விலை குறைவாம். இதனால் மக்களின் கவனம் முழுவதும் அதன் மீதே திரும்பியுள்ளதாம்.

பொருளாதார பின்னடைவு....

பொருளாதார பின்னடைவு....

கடந்தாண்டுகளை ஒப்பிடும் போது இங்கிலாந்தில் உணவு விலை தாறுமாறாக எகிறியுள்ளதாம். ஆனால், அதற்கு நேர்மாறாக சம்பளம் குறைந்துள்ளதாம்.

விலை குறைந்த உணவுகள்....

விலை குறைந்த உணவுகள்....

குறைவான ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பின்மையால் அங்குள்ள மக்கள் விலை குறைந்த உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட ஆர்வம் காட்டுகிறார்களாம்.

இயற்கை உணவுகள்....

இயற்கை உணவுகள்....

இதனால் அதிக கொழுப்பி, சர்க்கரை உள்ள உணவுகளின் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. பழம், காய்கறிகள் போன்ற இயற்கை உணவுகளை இவர்கள் ஓரம் கட்டத் தொடங்கி விட்டார்களாம்.

குண்டூஸ்....

குண்டூஸ்....

இதனால் அங்கு அதிக எடையுடன் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப் படுகிறது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

English summary
Britons hurt by lower incomes and rising food prices after the financial crisis have cut back on fruit and vegetables and turned instead to fatty, sugary, processed food, an academic study showed on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X