For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனடா நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடுத் தாக்குதல்- வீரர் பலி

Google Oneindia Tamil News

ஒட்டவா: கனடாவில் நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். தலைநகர் ஒட்டவாவில் நடைபெற்ற இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகே உள்ள போர் நினைவுச் சின்னம் மற்றும் ஒரு ஷாப்பிங் மால் ஆகியவை மீதும் இந்தத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்,

கனடாவின் தலைநகரமான ஒட்டவாவில் உள்ள அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இருவர் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர் அவர்கள் மர்ம நபர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேசிய போர் பாதுகாப்பு நினைவக சின்னத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு வீரர் பலியானார். பதில் தாக்குதலில் தீவிரவாதி ஒருவரும் பலியானார்.

தாக்குதல் சம்பவம் நடைபெற்ற போது நாடாளுமன்ற அரங்குக்குள் அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இருந்தாகவும், பின்னர் அவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடுத் தாக்குதலைத் தொடர்ந்து கனடா நாடாளுமன்ற பகுதி முழுவதும் உடனடியாக மூடப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றொரு மர்ம நபர் இன்னும் நாடாளுமன்ற வளாகத்திலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அவரைக் கைது செய்ய ராயல் கனடியன் மவுண்டட் போலீசார் குண்டு துளைக்காத உடைகள் அணிந்து அரங்கிற்குள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கும் முன் கியூபெக் நகரத்தில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் மீது மர்ம நபர் காரை விட்டு ஏற்றிச் சென்ற சம்பவமும் நடைபெற்றது. இதில் ஒரு வீரர் பலியானார். இன்னொருவர் பலத்த காயமடைந்தார்.

இந்த கார் தாக்குதலே தீவிராத செயலாக இருக்கும் அதிகாரிகள் கருதி வந்த நிலையில், பொதுவாக அமைதியாக காணப்படும் கனாடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் இந்த தீவிரவாதி சம்பவம் நடைபெற்றுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A gunman attacked Canada's parliament on Wednesday, with gunfire erupting near where Prime Minister Stephen Harper was speaking, and a soldier was fatally shot at a nearby war memorial, stunning the Canadian capital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X