கனடா வாழ் சீக்கியர்கள் வெறிச்செயல்- 3 இந்திய தூதரக அதிகாரிகளை படுகொலை செய்ய அழைப்பு விடுத்து பேனர்!
செர்ரி: சீக்கிய பயங்கரவாதிகள் படுகொலைக்கு பழிவாங்க கனடாவுக்கான 3 இந்திய தூதரக அதிகாரிகளை படுகொலை செய்ய அழைப்பு விடுத்து சீக்கியர்கள் கனடாவில் பேனர் கட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என்பது கனடா வாழ் சீக்கியர்களின் இலக்கு. இந்தியாவின் காலிஸ்தான் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட்டு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. இந்த ரத்தம் தோய்ந்த அத்தியாத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதுதான் கனடாவில் பதுங்கி இருக்கும் சீக்கிய பயங்கரவாத கும்பலின் இலக்கு. இதற்காகவே காலிஸ்தான் என்ற பெயரில் பல்வேறு இயக்கங்கள் செயல்படுகின்றன. கனடாவில் இருக்கும் சீக்கிய குருத்வாராக்கள் இந்த பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது.

இந்தியா- கனடா உறவு முறிவு: கனடாவில் பதுங்கி இருந்த இந்தியாவால் தேடப்படுகிற பயங்கரவாதி நிஜ்ஜார் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கனடாவோ, எங்கள் நாட்டு குடியுரிமை பெற்ற நிஜ்ஜார் படுகொலையில் இந்தியாவுக்கு பங்கு இருக்கிறது என குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் கனடா- இந்தியா உறவு முறிந்து போய்விட்டது. கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட இந்தியாவும் அதே பாணியில் டெல்லியை விட்டு கனேடிய தூதரக அதிகாரியை துரத்திவிட்டது.

படுகொலை செய்ய சீக்கியர்கள் அழைப்பு: இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையேயான உறவு மிகவும் சீர்குலைந்து போயிருக்கிறது. இந்த நிலையில் எரிகிற நெருப்பில் பெட்ரோல் டேங்கை கவிழ்ப்பது போல, சீக்கிய பயங்கரவாதிகள் ஒரு வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட செர்ரி நகர குருத்வாரா ஒன்றில் ஒரு பேனரை கட்டி வைத்துள்ளனர் சீக்கியர்கள். அதில் சீக்கிய பயங்கரவாதிகள் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் 3 இந்திய தூதரக அதிகாரிகள் கொல்லப்பட வேண்டும்; அதாவது 3 இந்திய தூதரக அதிகாரிகளை படுகொலை செய்யவேண்டும் என அழைப்பு விடுத்து அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் 3 இந்திய தூதரக அதிகாரிகள் படங்கள், பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிப் போன கனடா: இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் புகலிடமாக உருமாறிப் போய்விட்டது கனடா என்பதற்கு இதைவிட வேறு சாட்சி இருக்கவே முடியாது என்பதை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுவிட்டது நமது நாடு. இதனால் ஆடிப் போயிருக்கிறது கனடா. அத்துடன் உடனடியாக இந்தியாவுக்கு எதிரான இத்தகைய பேனர்கள், போஸ்டர்களை குருத்வாராக்கள் நிறுத்தவும் கனடா உத்தரவிட்டுள்ளதாம். குருத்வாராக்களில் லவுட் ஸ்பீக்கர் மூலம் பிரசங்கங்கள் நிகழ்த்தவும் கனடா அரசு தடை விதித்துவிட்டதாக கூறப்படுகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications