For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடைசி முறையாக சனியின் நிலவை சற்றே தொட்டுப் பார்த்த காஸினி விண்கலம்

Google Oneindia Tamil News

நாசா: நாசாவின் காஸினி விண்கலம் கடைசி முறையாக சனி கிரகதத்தின் நிலவான டயோனை ஒரு முறை ரவுண்டு அடித்து விட்டு வந்துள்ளது.

காஸினி விண்கலத்தின் ஆயுள் காலம் முடிவடையப் போகிறது. அது ஓய்வுக்குச் செல்லவுள்ளது. இந்த நிலையில் டயோன் நிலவை கடைசி முறையாக அது வட்டமடித்து வந்துள்ளது. முழுக்க முழுக்க ஐஸ் நிரம்பிய நிலவுதான் டயோன்.

சனி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய விண்கலம்தான் காஸினி. சனி கிரகம், அதைச் சுற்றியுள்ள மர்ம வளையங்கள், ஏகப்பட்ட சனி கிரக நிலவுகள் உள்ளிட்டவற்றை நீண்ட காலமாக ஆய்வு செய்து நமக்கு தகவல்கள், புகைப்படங்களை தந்து வந்தது காஸினி.

கூடுதல் தகவல்கள்...

கூடுதல் தகவல்கள்...

அதன் ஆயுள் காலம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்ததால் நமக்கும் கூடுதலான தகவல்கள் கிடைத்து வந்தன. இந்த நிலையில் கடைசி முறையாக அது டயோனை சுற்றஇப் பார்த்து வந்துள்ளது.

டயோனை வட்டமடித்தது...

டயோனை வட்டமடித்தது...

திங்கள்கிவமையன்று காஸினி விணகலம் டயோனை இறுதியாக வட்டமடித்தது. நிலவிலிருந்து 295 மைல்கள் தூரத்தில் அது நெருங்கிச் சென்றது.

புதுப்புதுத் தகவல்கள்...

புதுப்புதுத் தகவல்கள்...

இதுவரை நான்கு முறை டயோனை சுற்றி வந்துள்ளது காஸினி விண்கலம். ஒவ்வொரு முறையும் புதுப்புதுத் தகவல்களை அது கொண்டு வந்தது என்பது முக்கியமானது.

சனி கிரகம்...

சனி கிரகம்...

கடந்த 1997ம் ஆண்டு காஸினி விண்கலம் ஏவப்பட்டது. பூமியிலிருந்து 900 மில்லியன் மைல்கள் தொலைவில் சனி கிரகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 97ல் ஏவப்பட்ட காஸினி, 2004ல் சனி கிரகத்தை எட்டியது.

எரிபொருள் தீரப்போகிறது...

எரிபொருள் தீரப்போகிறது...

தொடர்ந்து அது நன்றாகவே இயங்கி வருகிறது என்றாலும் கூட அதில் உள்ள எரிபொருள் கிட்டத்தட்ட தீரப் போகிறது. மேலும் அதன் ஓடோ மீட்டரானது இதுவரை 4.3 பில்லின் மைல்கள் தூரம் வரை ஓடி விட்டது.

இன்னும் 25 மாதங்கள்...

இன்னும் 25 மாதங்கள்...

இன்றிலிருந்து 25 மாதத்தில் காஸினி விண்கலம் அழிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Cassini spacecraft has investigated Saturn, its distinctive rings and dozens of moons far longer than the experts at NASA’s Jet Propulsion Laboratory had ever hoped. But the end of the mission is drawing near as is the end of Cassini itself so milestones are taking on a tone of bittersweet nostalgia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X