ஸ்பெயினில் இருந்து விடுதலை பெற்றதாக கேட்டலோனியா நாடாளுமன்றம் அதிரடி பிரகடனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பார்சிலோனா: ஸ்பெயின் கூட்டரசில் இருந்து விடுதலை பெற்று தனிநாடாகிவிட்டதாக கேட்டலோனியா நாடாளுமன்றம் அதிரடியாக பிரகடனம் செய்துள்ளது.

ஸ்பெயின் கூட்டரசில் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்று கேட்டலோனியா. ஸ்பெயின் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவதாக கூறி கேட்டலோனியாவில் தனிநாடு முழக்கங்கள் எழுந்தன.

Catalonia Declares Independence From Spain

கேட்டலோனியா தனி நாடாவது தொடர்பாக அண்மையில் பொது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்புக்கு ஸ்பெயின் மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு எதிராக வன்முறை வெடித்தது.

இவ்வாக்கெடுப்பில் கேட்டலோனியா தனி நாடாக மலருவதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் ஸ்பெயின் மத்திய அரசு இதை நிராகரித்தது.

இந்நிலையில் ஸ்பெயின் கூட்டரசில் இருந்து வெளியேறி தனி நாடாகிவிட்டதாக கேட்டலோனியா நாடாளுமன்றம் பிரகடனம் வெளியிட்டுள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள ஸ்பெயின் மத்திய அரசு, கேட்டலோனியாவை தமது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டுவருவதற்கு முழு வீச்சில் களமிறமிங்கியுள்ளது. இதனால் கேட்டலோனியாவில் பெரும் பதற்ரம் நிலவுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Catalan Parliament declared independence from Spain on Friday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற