For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வூகானில் புதிதாக பரவ தொடங்கிய கொரோனா .. அதிர்ச்சியில் அதிகாரிகள்.. சீனா எடுத்த அதிரடி முடிவு

Google Oneindia Tamil News

பெய்ஜிங் : சீனாவில் முதல் முதலாக கொரோனா தோன்றியதாக கூறப்படுகிறது. வூஹானில் மீண்டும் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள மொத்த மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது,

Recommended Video

    China-வில் மீண்டும் அதிகரிக்கும் Coronavirus.. பாதிப்பை கட்டுப்படுத்த அதிரடி முடிவு?

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் நகரில் கொரோனா பரவல் கண்டறியப்பட் டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி, கடந்த 2 ஆண்டுகளாக அடுத்தடுத்து கொரோனா அலைகள் உருவாகி கொண்டிருக்கின்றன

    கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உலகின் பல்வேறு நாடுகளை துவம்வசம் செய்துவிட்டு, இன்னும் சில நாடுகளில் 3வது அலை, 4வது அலை, அடுத்தடுத்த வெர்சனில் பரவிக்கொண்டிருக்கிறது. இதற்கு எப்போது முடிவு கிடைக்கும் என்று தெரியாமல் உலகமே விழி பிதுங்குகிறது.

     அதிக தடுப்பூசி போட்ட நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவுவது ஏன்? அதிக தடுப்பூசி போட்ட நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவுவது ஏன்?

    மரபணு மாறியது

    மரபணு மாறியது

    இதுவரை கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்துவிட்டனர். பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தொற்று முடிவுக்கு வரவில்லை. மரபணு மாறி, பரவி வருவதால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

    13 நகரங்கள்

    13 நகரங்கள்

    சீனாவில் தற்போது டெல்டா வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது. சீனாவில் ஜியாங்சூ, செச்சுவான், லியானிங், ஹூனான், ஹூபெய் உள்ளிட்ட 5 மாகாணங்களில் தற்போது கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.இந்த மாகாணங்களில் வைரஸ் பரவலைகட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன . தலைநகர் பெய்ஜிங் உட்பட 13 நகரங்களிலும் வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது.

    மக்களுக்கு அறிவுரை

    மக்களுக்கு அறிவுரை

    ஜியாங்சூ மாகாண தலைநகர் நான்ஜிங்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த நகரில் விமான சேவை உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 41,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நகரில் வசிக்கும் சுமார் 93 லட்சம் மக்களும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அனைவருக்கும் பரிசோதனை

    அனைவருக்கும் பரிசோதனை

    இநநிலையில் கொரோனா முதல்முதலாக பரவிய வூஹானில் கொரோனா வைரஸ் பாதிப்பு 7 பேருக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனால் நகரில் உள்ள மொத்த மக்களுக்கும் அதாவது 1.10கோடி மக்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த தகவலை அதிகாரிகள் உறுதி செய்தனர். வுஹானின் மூத்த அதிகாரி லி தாவோ இந்த தகவலை தெரிவித்தார்.

    English summary
    The Wuhan city of 11 million is "swiftly launching comprehensive nucleic acid testing of all residents", senior Wuhan official Li Tao said at a press conference Tuesday, a day after seven cases were found.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X