For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரம்மாண்ட ஆபரேஷன்.. நிலவில் மாபெரும் அணுஉலையை அமைக்கும் சீனா.. ஏன்? பின்னணியில் பெரிய பிளான்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: நிலவுக்கான ரேஸ் மீண்டும் உலக அளவில் தீவிரம் அடைந்து உள்ளது. சோவியத் யூனியன் காலத்தில் அமெரிக்கா - சோவியத் ரஷ்யா இடையே நிலவிற்கான ரேஸ் மிக தீவிரமாக இருந்தது. தற்போது மீண்டும் நிலவை பிடிப்பதற்கான போட்டி தீவிரம் அடைந்துள்ளது.

இந்த முறை நாடுகள் மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களாக ஸ்பேஸ் எக்ஸ், விர்ஜின் கேலக்டிகா, ப்ளூ ஒரிஜின் போன்ற நிறுவனங்களும் போட்டியில் குதித்து உள்ளன. நிலவிற்கு வெறுமனே செல்வதற்கான திட்டங்கள் எல்லாம் முடிந்துவிட்டன.

இப்போது உலக நாடுகள் நிலவில் குடியேறுவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றன. நிலவில் நிரந்தமாக குடியேறுவதற்கான பிளான்களை வகுத்து வருகின்றன.

 அதிசயம்! ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் பல கிரகங்கள்.. கூட வந்து ஒட்டிக்கொண்ட நிலவு! மிஸ் பண்ணாதீங்க அதிசயம்! ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் பல கிரகங்கள்.. கூட வந்து ஒட்டிக்கொண்ட நிலவு! மிஸ் பண்ணாதீங்க

நிலா

நிலா

அந்த வகையில்தான் நிலவில் மிகப்பெரிய பேஸ் ஒன்றை சீனா அமைக்க முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவிற்கு இருக்கும் ஆதிக்கத்தை காலி செய்வதற்காக நிலவில் இந்த பேஸை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. நிலவில் திரவமாக தண்ணீர் இல்லை என்றாலும்.. ஆங்காங்கே பல இடங்களில் உறைந்த நிலையில் ஐஸ் பாறைகளாக தண்ணீர் காணப்படுகிறது. நிலவில் தண்ணீர் இருப்பதை முதலில் சந்திராயன் மூலம் இஸ்ரோதான் கண்டுபிடித்தது.இந்தியாவின் இந்த கண்டுபிடிப்பை பின்னர் நாசாவும் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

சீனா

சீனா

இந்த நிலையில்தான் சீனா நிலவில் பேஸ் அமைக்கும் ஆலோசனையில் உள்ளது. அதாவது நிலவிலேயே தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு வசதியாக அங்கு கேம்ப் போன்று அமைக்கும் திட்டத்தில் நாசா உள்ளது. அதோடு வேற்று கிரகங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நிலவில் இருந்து இன்னும் எளிதாக செல்ல முடியும். இதனால் நிலவில் மிகப்பெரிய அளவில் கட்டுமானங்களை நாசா தொடங்க உள்ளது. அங்கே உள்ளே இருக்கும் தண்ணீரை உருக்கி.. ஆறுகளையும் ஏற்படுத்த முடியும் என்று சீனா நினைக்கிறது.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இதற்காக சீனா அங்கு அணு உலைகளையும் அமைக்க உள்ளது. அங்கு பெரிதாக சூரிய ஒளி கிடையாது, எரிவாயு கிடையாது, காற்றும் பூமியில் இருப்பது போல கிடையாது. எனவே மின்சார தேவைக்கு அங்கு இருக்கும் ஒரே வழி அணுமின்சாரம் மட்டுமே. அணு சக்தி மூலம் இயங்க கூடிய உலைகளை உருவாக்க சீனா முடிவு செய்துள்ளதாம். அங்கே அமைக்கப்படும் இந்த பேஸ் என்பது ஒரு பெரிய லேண்டர்.. அதாவது தரையிறங்கும் சாதனத்தை கொண்டு இருக்கும். இந்த லேண்டரில் உட்பக்கம் ஆய்வகம், தங்கும் இடம் எல்லாம் இருக்கும்.

அணு உலை

அணு உலை

இதற்கு அருகிலேயே அணு உலையும் இருக்கும். இதற்கு சிக்னல் வழங்க மேலே ஒரு ஆர்பிட்டர் இருக்கும். அதேபோல் இவர்களுக்கு உதவி செய்ய ஒரு ரோவர் இருக்கும். இது எல்லாம் 2028க்குள் செய்து முடிக்கப்படும் என்று சீனா தெரிவித்து உள்ளது. சீனாவின் சாங்க் 6, 7 மற்றும் 8 மிஷன்கள் மூலம் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. இங்கே சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் தங்கி வேலை செய்வார்கள். நிலாவில் மின்சார வசதிதான் சிக்கல்.

தீர்வு அணு சக்தி

தீர்வு அணு சக்தி

அதற்கு தீர்வாகவே அணு சக்தியை பயன்படுத்த உள்ளோம் என்று சீனா தெரிவித்து உள்ளது. இதன் மூலம் ஸ்பேஸ் ரேஸில் சீனா - அமெரிக்கா நேரடியாக மோத உள்ளன. 2019ல் முதல் நாடாக சீனாவின் நிலவிற்கு ரோவர் அனுப்பியது. அதோடு அங்கிருந்து நிலவின் சாம்பிள்களை பூமிக்கு கொண்டு வந்தது. நிலவின் தெற்கு பகுதியில் சீனாவின் இந்த பேஸ் அமைக்கப்பட உள்ளது. இங்குதான் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் சீனா அங்கே ஆராய்ச்சி பேஸை அமைக்க உள்ளது.

English summary
China Moon Base Operation: The communist country to build a nuclear power base before 2028 .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X