For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய கொரோனா எங்கிருந்து வந்தது.. திடீரென ஸ்பைக்.. ஆடிப்போன சீனா.. 'போர்க்கால நிலைமை' என அறிவிப்பு

Google Oneindia Tamil News

ஜின்ஜியாங்: கொரோனா வைரஸ் கேஸ்கள் திடீரென சீனாவின் மேற்கில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் அதிகரித்ததையடுத்து "போர்க்கால நிலைமை" என்று சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஒரு பக்கம் பேய் மழை மறு பக்கம் கொரோனா என சீனா கடும் சிக்கலில் தவிக்கிறது.

சின்ஜியாங் மாகாணத்தில் 17 பேருக்கு கொரோனா பரவியது இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை 23 பேருக்கு தொற்றுகள் பதிவாகியுள்ளன, 269 பேர் அங்கு கண்காணிப்பில் உள்ளனர்.

இதனால் பிப்ரவரியில் சீனாவின் கொரோனா பரவல் மையமான வுஹானில் இருந்து இருபத்தொரு மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் சனிக்கிழமை காலை சின்ஜியாங்கின் தலைநகரான உரும்கிக்கு வந்துள்ளனர்.

மொத்தமாக பரவல்

மொத்தமாக பரவல்

உரும்கியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை கடுமையாக உயர்ந்தது, வெள்ளி முதல் சனிக்கிழமை நண்பகல் வரை மொத்தம் 11 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளதாக பிராந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. மொத்தம் 269 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். ஆனால் இதை உலக சுகாதார அமைப்பு (WHO) வழிகாட்டுதல்களை மீறி சீனா கொரோனா நோயாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை.

போர்க்கால நிலைமை

போர்க்கால நிலைமை

35லட்சம் மக்கள் தொகை கொண்ட உரும்கி நகரம் "போர்க்கால முறைக்கு" சென்றுவிட்டதாக சின்ஜியாங் அரசாங்கம் சனிக்கிழமை அறிவித்தது. உள்ளூர் மக்கள் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் நகரத்தை விட்டு வெளியேற விரும்புபவர்கள் சோதிக்கப்படுகிறார்கள். நெருங்கிய தொடர்புகளுடன் பணிபுரியும் அல்லது ஒரே இடத்தில் வாழும் அனைவரும் சோதிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

எப்படி பரவியது

எப்படி பரவியது

புதிய நோய்த்தொற்று எப்படி பரவியது என்பதற்காக ஆதாரம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் நகரத்தின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ருய் பாலிங், தியான்ஷான் மாவட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்கள் அனைத்தும் மொத்தமாக கொத்தாக ஒரே இடத்தில் பரவி இருக்கிறது. சின்ஜியாங்கில் இரண்டாவது வெடிப்பின் மூலத்தை அடையாளம் காண அனைத்து கேஸ்களின் மரபணு வரிசைப்படுத்துமாறு உள்ளூர் சுகாதார ஆணையம் கேட்டுள்ளது என்று ருய் கூறினார்.

Recommended Video

    China Flood : இயற்கையின் சாபத்தில் China | பேராபத்தில் 8.5 மில்லியன் சீன மக்கள் | Oneindia Tamil
    முதல்முறையாக பரவல்

    முதல்முறையாக பரவல்

    கடந்த 150 நாட்களில் நகரத்தின் முதல் கேஸ் 24 வயதான ஒரு பெண்ணுக்கு வந்தது. தியான்ஷான் மாவட்டத்தில் ஒரு ஷாப்பிங் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அறிகுறிகள் தெரிந்த நிலையில், அவர் ஆம்புலன்ஸ் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அதன்பிறகு தான் கொரோனா கிடுகிடுவென அதிகரித்தது.

    English summary
    Chinese authorities on Sunday declared the Xinjiang province in the country's far west as "wartime situation" after the region reported a sudden spike in coronavirus cases, Al Jazeera reported.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X