For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.. சீனாவிற்கு எதிராக கொந்தளிக்கும் சொந்த மக்கள்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியாவை போல சீனா இல்லை என்று அந்த நாட்டை சேர்ந்த மக்களே அரசுக்கு எதிராக பொங்கி எழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கு அரசுக்கு எதிராக இணையத்தில் மக்கள் தங்கள் கொதிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

Recommended Video

    China அரசுக்கு எதிராக திரும்பிய அந்நாட்டு மக்கள்

    இந்தியா - சீனா இடையே எல்லையில் தீவிரமான மோதல் ஏற்பட்டு வருகிறது. அங்கு நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமை கல்வான் பகுதியில் பெரிய மோதல் ஏற்பட்டது.

    இந்த லடாக் மோதலில் மொத்தம் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் மொத்தம் 43 வீரர்கள் பலியானதாக தகவல்கள் மட்டுமே வருகிறது.

    இந்திய வீரர்கள் உடலில் கூர்மையான ஆயுதத்தாலான காயங்கள்.. மூட்டு முறிவுகள்.. இந்திய வீரர்கள் உடலில் கூர்மையான ஆயுதத்தாலான காயங்கள்.. மூட்டு முறிவுகள்..

    சீனா எதிர்ப்பு

    சீனா எதிர்ப்பு

    இந்த நிலையில் சீனாவிற்கு எதிராகவே அந்நாட்டு மக்கள் கொந்தளிக்க தொடங்கி உள்ளனர். சீனாவின் பிரபலமாக இருக்கும் சமுக வலைத்தளமான Weiboவில் அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அப்படி என்ன போஸ்ட் செய்து வருகிறார்கள், சீனாவில் பலியான வீரர்கள் குறித்துதான். கல்வான் சண்டையில் எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள் என்ற விவரமா வெளியாகவில்லை. இது தொடர்பாக சீனா எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    சீனா மறுப்பு

    சீனா மறுப்பு

    தொடர்ந்து சீன அரசு இது தொடர்பான விவரங்களை வெளியிடாமல் மக்கள் இருட்டுக்குள் வைத்து இருக்கிறது. இந்த சண்டையில் எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள் என்பது இன்னும் புதிராக உள்ளது. சீனா இதை தொடர்ந்து மறைத்து வருவது அந்த நாட்டு மக்களை கோவம் அடைய வைத்துள்ளது. அரசுக்கு எதிராக Weibo இணையத்தில் கடுமையான கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

    என்ன கேள்வி

    என்ன கேள்வி

    அவர்கள் தங்கள் போஸ்டுகளில், இந்தியாவில் எத்தனை வீரர்கள் பலியானார்கள் என்று வெளிப்படையான விவரம் வெளியாகி உள்ளது. 20 வீரர்களின் பெயர்களை கூட அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அதோடு நாடு முழுக்க அதற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்களுக்கு ராணுவ மரியாதையுடன் இரங்கல் தெரிவித்து இறுதி சடங்கு நடத்தி உள்ளனர்.

    இறுதி சடங்கு

    இறுதி சடங்கு

    ஆனால் சீனா இதை பற்றி எதுவும் சொல்லவில்லை. ஏன் எத்தனை வீரர்கள் காயம் அடைந்தனர் கூட சொல்லவில்லை. சீனா தனது வீரர்களை மதிக்கவில்லை. இந்தியாவிடம் பார்த்து சீனா கற்றுக்கொள்ள வேண்டும் . விமர்சனங்களை கருத்தில் கொள்ளாமல் இந்தியா உண்மையை சொல்கிறது. ஆனால் சீனாவிடம் அந்த நேர்மை இல்லை என்று அந்நாட்டு மக்களே சீன அரசை கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர்.

    முதல் முறை இப்படி

    முதல் முறை இப்படி

    கொரோனா பாதிப்பின் போதும் சீன மக்கள் அந்நாட்டு அரசை கேள்வி கேட்டனர். கொரோனா பரவலுக்கு தொடக்க காலத்தில் விளக்கம் கேட்டனர். அதன்பின் தற்போதுதான் அந்நாட்டு அரசையே மீண்டும் மக்கள் கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். பொதுவாக அந்நாட்டு அரசை மக்கள் கேள்வி கேட்பது மிகவும் அரிதான விஷயம் ஆகும். இப்போது லடாக் காரணமாக அந்த அதிசயம் நடந்துள்ளது.

    என்ன பதிலடி

    என்ன பதிலடி

    இதனால் சீன வீரர்களின் மரணம் குறித்து பேசாமல் இருந் அந்நாட்டு குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தற்போது செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்தியா தொடர்ந்து சீன வீரர்களின் மரணம் குறித்து பொய் சொல்லி வருகிறது. சீன வீரர்கள் அதிக பேர் பலியானதாக தொடர்ந்து இந்தியா பொய் சொல்லி வருகிறது. சீன மக்கள் இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

    English summary
    China standoff with India: It's own people raise against Beijing on the death toll in Galwan attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X