For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஸ்பேஸ் சூப்பர் பவர்"ஆக திட்டமா?.. 3 பேரை விண்ணிற்கு அனுப்பிய சீனா.. கட்டப்படும் ஸ்பேஸ் ஸ்டேஷன்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: விண்வெளியில் சீனா டியாங்யாங் என்ற ஸ்பேஸ் ஸ்டேஷனை கட்டி வரும் நிலையில் இன்று அதிகாலை 3 விண்வெளி வீரர்களை சீனா வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது.

Recommended Video

    Tiangong Space Station-ஐ வைத்து போடப்படும் திட்டம்.. 3 பேரை விண்ணிற்கு அனுப்பிய China

    அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியாக ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ள நிலையில், சீனா தற்போது தனியாக டியாங்யாங் என்ற விண்வெளி ஆராய்ச்சி மையத்தை கட்டி வருகிறது.

    ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நுழைய சீனாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டியாங்யாங் என்ற தனி விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுயமாக சீனா உருவாக்கிக் கொண்டு இருக்கிறது.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164; மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கு கொரோனா கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164; மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கு கொரோனா

    என்ன

    என்ன

    இந்த நிலையில் இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இணைவதற்காக சீனா 3 விண்வெளி வீரர்களை இன்று விண்ணிற்கு அனுப்பியது. Long March-2F ராக்கெட் மூலம் சீனா இவர்களை விண்ணுக்கு அனுப்பியது. டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தில், விண்வெளியில் 3 மாதம் இவர்கள் இருப்பார்கள். சீனாவின் மிக நீண்ட விண்வெளி திட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    எங்கு

    எங்கு

    சீனாவின் ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து இவர்கள் விண்ணில் எனப்பட்டனர். 10 நிமிடத்தில் சுற்று வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்த இவர்கள், இன்னும் 6 மணி நேரத்தில் டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தில் இணைவார்கள். அங்கு கட்டுமான பணிகள், ஆராய்ச்சி பணிகள், அதோடு 4- 7 மணி ஸ்பேஸ் வாக் என்று பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய உள்ளனர்.

    ஏப்ரல்

    ஏப்ரல்

    கடந்த ஏப்ரல் 29ம் தேதிதான் டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தின் கோர் மாடலை சீனா விண்ணிற்கு ஏவியது. இந்த நிலையில் அங்கு சீனா மனிதர்களை அனுப்பி உள்ளது. விண்ணிற்கு அனுப்பப்பட்ட 3 பேரில் 2 பேர் ராணுவத்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். கடந்த 5 வருடங்கள் கழித்து முதல்முறையாக சீனா இப்படி மனிதர்களை மீண்டும் விண்ணுக்கு அனுப்பி உள்ளது.

    6000 மணி

    6000 மணி

    6000 மணி நேரம் கடினமான பயிற்சிக்கு பின் இவர் விண்ணுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். தற்போது 70 டன் எடை கொண்டு இருக்கும் டியாங்யாங் ஸ்பேஸ் ஸ்டேஷனை விரிவாக்கும் திட்டத்தில் இவர்கள் உள்ளனர். இன்னும் 11 முறை ராக்கெட்டுகளை விண்ணுக்கு ஏவி, ஆராய்ச்சி பொருட்களை சீனா டியாங்யாங் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி உள்ளது. இன்னும் 3 ராக்கெட்டுகள் மூலம் கூடுதல் ஆராய்ச்சியாளர்கள் டியாங்யாங் ஸ்டேஷனுக்கு சீனாவில் இருந்து செல்ல உள்ளனர்.

    பழிவாங்கல்

    பழிவாங்கல்

    சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான ஐஎஸ்எஸ் ஆராய்ச்சி மையம் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஐரோப்பா, ஜப்பானின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. இங்கு சீன ஆராய்ச்சியாளர்களுக்கு தடை உள்ளது. இதனால் சீனா சொந்தமாக டியாங்யாங் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி வருகிறது. ஸ்பேஸ் சூப்பர் பவராக ஆகும் திட்டத்தில் சீனா உள்ளது.

    சீனா

    சீனா

    ஏனென்றால் சர்வதேச ஆராய்ச்சி மையம் 2024ல் ஓய்வு பெறும். இதனால் அப்போது சீனாவின் டியாங்யாங் ஆராய்ச்சி மையம் மட்டுமே மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாக இருக்கும். இதை மனதில் வைத்தே சீனா டியாங்யாங் மையத்தை வேகமாக கட்டி வருகிறது. 2031க்கு பின்பும் டியாங்யாங் வேலை செய்யும். இதனால் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் ஐஎஸ்எஸ் இடத்தை டியாங்யாங் மூலம் பிடிக்கலாம் என்று சீனா நம்புகிறது.

    தடை பதிலடி

    தடை பதிலடி

    அமெரிக்காவின் தடைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா இதில் வேகம் காட்டி வருகிறது. சர்வதேச அளவில் மற்ற நாடுகள் டியாங்யாங் ஆராய்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினால் கலந்து கொள்ளலாம் என்று சீனா அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே இதில் கலந்து கொள்ள சில நாடுகள் ஆசை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    China successfully lifts off 3 men to Tiangong space station today for the space stating expansion program.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X