For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் 6.1 கோடி அனாதைக் குழந்தைகள்- கிராமத்திற்கு பெயரே “மதர்லெஸ் வில்லேஜ்”!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் உள்ள கிராமங்களில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகள் பெருமளவில் உள்ளனராம். கிட்டத்தட்ட 6.1 கோடி அனாதைக் குழந்தைகள் சீனக் கிராமங்களில் வசிக்கிறார்களாம்.

சீனாவின் கிராமப்புற பகுதிகளில் கிட்டத்தட்ட 6.1 கோடி சிறார்கள், பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

இதில் ஒரு கிராமத்தில் மட்டும் 132 குழந்தைகள் அவ்வாறு உள்ளனராம். அந்தக் கிராமத்திற்கு மதர்லெஸ் வில்லேஜ் என்றே பெயரிட்டுள்ளனர்.

China villages have over 61 million ‘forced orphans’

வேலைவாய்ப்பு தேடிப் போவதால்

நகர்ப்புற வேலைவாய்ப்புகளைத் தேடிச் செல்லும் பொற்றோரால் கிராமத்தில் தவிக்க விடப்படும் குழந்தைகள் பெரும் பிரச்சினைகளை சமாளிப்பதாக கூறப்படுகிறது.

பாலியல் தொந்தரவுகள்

அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஹூவான் ஜிங் கிராமம்

ஹுவான் ஜிங் கிராமமானது இதில் விசேஷமானது. இந்தக் கிராமம் மத்திய சீனாவில் அமைந்துள்ளது. இ

தாயில்லா கிராமம்

இந்த கிராமத்தில்தான் 132 குழந்தைகள் தாயில்லாமல் தவித்து வருகின்றனர். அதனால் இந்த கிராமத்திற்கே "தாயில்லா கிராமம்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பள்ளி செல்லும் சிறார்கள்

இந்த 132 குழந்தைகளுமே பள்ளி செல்லும் வயதிலான குழந்தைகள். அதில் மூத்த குழந்தை நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றார். அதில் 116 பேர் தாயில்லாதவர்கள்.

ஒன்று மறுமணம்.. இல்லாவிட்டால் மரணம்

அவர்களுடைய தாயார்கள் ஒன்று அடுத்த திருமணம் செய்துள்ளார்கள். இன்னும் சிலர் இறந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதியுள்ளவர்களின் தாயார்கள் வேலை தேடி நகருக்கு சென்று விட்டனர்.

English summary
China's rural areas have over 61 million "left behind" children with a "motherless village" accounting for 132 abandoned kids, highlighting the plight as they are neglected by their parents in pursuit of jobs in cities, even as reports said girls living in such conditions are most vulnerable to sexual offences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X