தைவான் மீது போர்.. அமெரிக்காவிற்கு சீனா நேரடி எச்சரிக்கை.. சர்வதேச அரசியலில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அமெரிக்கா சீனா மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்குச் சீனா ஓப்பனாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இருக்கும் உறவு கடந்த சில ஆண்டுகளாகவே மோசமடைந்து வருகிறது. டிரம்ப் அதிபராக இருந்த சமயத்தில் இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்துக் கொண்டதும் அனைவருக்கும் தெரியும்.

பைடன் அதிபரான பின்னர், நிலைமை சற்று மேம்படுவது போலத் தெரிந்தது. அதுவும் கூட கடந்த சில வாரங்களாக இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு உள்ளது.

 பைடன்

பைடன்

சமீபத்தில் ஜப்பான் சென்று இருந்த அமெரிக்க அதிபர் பைடன் அந்நாட்டின் பிரதமரை நேரில் சந்தித்து இருந்தார். அப்போது ரஷ்யாவைப் போலச் சீனா தைவான் மீது படையெடுத்தால், தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பைடன் சற்று தாமதிக்காமல் "ஆம்! நிச்சயமாக" என்று பதில் அளித்தார்.

 சீனா

சீனா

இந்த பதில் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குச் சீனா கடும் பதிலடி கொடுத்து இருந்தது. தைவான் விவகாரம் என்பது சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் நலன்களைத் தொடும் பிரச்சினைகளில், சீனா எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ளாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. அதன் பின்னர் சில நாட்கள் கழித்து தைவான் பகுதியில் போர்ப் பயிற்சியையும் நடத்தி இருந்தது.

 ஓப்பன் வார்னிங்

ஓப்பன் வார்னிங்

இவை அனைத்தும் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், தைவான் விவகாரம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருக்குச் சீனா நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்து கூறி உள்ளது. சிங்கப்பூர் நாட்டில் வைத்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் ஃபெங்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Recommended Video

    China-வை லேசா நினைக்காதீங்க..America Warns India | Rajnath Vitenum Visit | *DefenceWrap
     தயங்காது

    தயங்காது

    அப்போது அமெரிக்க அமைச்சருக்கு நேரடியாகவே சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தைவான் சுதந்திரத்தை அறிவித்தால், அதன் மீது போரைத் தொடங்க தயங்க மாட்டோம் எனச் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து லாயிட் ஆஸ்டினுடனான சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கே கூறியதாக வெளியான தகவலில், "தைவானைச் சீனாவில் இருந்து பிரிக்க யாராவது துணிந்தால், சீன ராணுவம் நிச்சயமாக ஒரு போரைத் தொடங்க தயங்காது.

     போர்

    போர்

    தைவான் சுதந்திரம் என்ற சதியை முறியடித்து, தாய்நாட்டின் ஒருங்கிணைப்பை உறுதி செய்ய உறுதியாக நிலை நிற்கும். தைவான் இப்போது மட்டுமின்றி எப்போதும் சீனாவின் தைவான் தான்! தைவான் மூலம் சீனாவைக் கட்டுப்படுத்தலாம் என யாராவது நினைத்தால்.. அது ஒருபோதும் நடக்காது! தைவான் மீதான ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

     தைவான் விவகாரம்

    தைவான் விவகாரம்

    சீனா ஒருபோதும் தைவானை ஆட்சி செய்ததில்லை. ஆனால் தைவான் தீவைச் சீனா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறது. தேவைப்பட்டால் ஒரு நாள் வலுக்கட்டாயமாகத் தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்ளவும் சீனா தயாராகவே உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் தான் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+