For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 குழந்தைகள் பெற்ற சீன சினிமா இயக்குநர்: ரூ.7.25 கோடி அபராதம்

By Mathi
Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் 6 குழந்தைகளைப் பெற்ற சினிமா இயக்குநருக்கு 7.25 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கடுமையாக அமல் படுத்தப்படுகிறது. பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருந்தாலும், அதையும் மீறி ஒரு சிலர் மறைமுகமாக ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தையை பெறுகின்றனர். இந்த நிலையில் சீனாவின் புகழ்பெற்ற சினிமா இயக்குநர் ஷங் யிமோயுக்கு 6 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. எனவே, அவர் மீது வழக்கு தொடர்பட்டது.

அவரிடம் 9 குழுவினர், கடந்த 6 மாத காலமாக தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் அவருக்கு 6 குழந்தைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முடிவில், அவருக்கு ரூ. 7 கோடியே 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இவரது வருமானத்தை கணக்கில் கொண்டு மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Zhang Yimou, the Chinese film director, could be fined seven million yuan (£700,000) after admitting to having six children
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X