தற்கொலைக்குதற்கொலைக முயன்ற சீனப் பெண்... எட்டி உதைத்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்... வைரலான வீடியோ

Posted By: Jaya chitra
Subscribe to Oneindia Tamil
  தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய வீரர்

  பெய்ஜிங்: சீனாவில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் பின்னால் எட்டி உதைத்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி உள்ளது.

  சீனாவின் நன்ஜிங் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர், 8வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னலில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

  Chinese Fire Fighter Saves Suicidal Women By Kicking Her Back

  இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  ஆனால் அவர்கள் எவ்வளவு சொல்லியும், அந்த பெண் கீழே இறங்கவில்லை. இதையடுத்து, அந்த பெண்ணின் வீட்டிற்கு மேல் தளத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர், அந்த வீட்டு ஜன்னல் வழியாக கயிறு கட்டி கீழ் தளத்தில் தற்கொலை மிரட்டல்விடுத்த பெண்ணின் வீட்டிற்கு இறங்கினார்.

  கயிறு மூலம் கீழே இறங்கிய வீரர், ஜன்னலில் அமர்ந்திருந்த அந்த பெண்ணின் பின்னால் உதைத்து வீட்டிற்குள் தள்ளினார். இதையடுத்து அந்த பெண் தற்கொலை செய்வதில் இருந்து காப்பாற்றப்பட்டார்.

  இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை சீனாவின் சி.ஜி.டி.என். தொலைக்காட்சி இணையத்தில் வெளியிட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக உலா வருகிறது. இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் மட்டும் அறுபது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  In Nanjing city of China, a fire fighter saved a suicidai women by kicking her back into the apartment.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற