For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவுல் ஆன்லைன் மூலம் குழந்தைக் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் கைது: 382 குழந்தைகள் மீட்பு

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனப் போலீசார் சுமார் 382 குழந்தைகளைக் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 19ம் தேதி சந்தேகத்தின் பேரில் சுமார் 1,094 பேரைக் கைது செய்துள்ளனர் சீனப் போலீசார். அதன் மூலம் நான்கு முக்கிய குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.

அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் படி சுமார் 382 கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்டவர்கள் இணையத்தில் தங்களை தத்து எடுப்பவர்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்கள் நடத்துபவர்களாக போலி அடையாளங்களுடன் உலா வந்துள்ளனர்.

குற்றவாளிகளை சுலபமாக அடையாளம் காணுவதில் உள்ள சிக்கலைப் பயன்படுத்தி சமீபகாலமாக இணையம் மூலமாக குழந்தைக்கடத்தலில் ஈடுபடுவர்கள் அதிகரித்துள்ளதாக சீனப் போலிசார் தெரிவித்துள்ளனர்.

English summary
Chinese police have busted four major online baby-trafficking groups and saved 382 babies this month, said the ministry of public security.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X