வாழ்நாள் முழுக்க அதிபர்தானா ஜி ஜின்பிங்? தொடங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்! தீர்மானம் தாக்கல்?
பீஜிங்: சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்தியக் குழு ஆறாவது அமர்வை இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 4 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும். மூன்றாவது முறையாக அதிபராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்தியக் குழு கூட்டத்தில், உறுப்பினர்கள் சுமார் 400 பேர் பங்கேற்கின்றனர் என்று அரசு ஊடகமான Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகால முக்கிய சாதனைகள் மற்றும் வரலாற்று அனுபவம் குறித்த வரைவுத் தீர்மானத்தின் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அதிபருமான ஜி ஜின்பிங்.

ஜி ஜின்பிங் அதிகாரம்
68 வயதான ஜி ஜின்பிங், சீனாவின் மூன்று அதிகார மையங்களை தன் வசம் வைத்திருக்கிறார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், ராணுவத்தின் ஒட்டுமொத்த உயர் கட்டளையகமாக உள்ள, சக்திவாய்ந்த மத்திய ராணுவ ஆணையத்தின் (CMC) தலைவர் மற்றும் அதிபர் பதவி அவர் வசம் இருக்கிறது. எனவே அவர் கட்டளையே சாசனம் என்ற அளவுக்கு சீனாவில் ஜி ஜின்பிங் கை ஓங்கி விட்டது.

மாவோ சேதுங்கிற்கு பிறகு
9 ஆண்டுகளாக ஜி ஜின்பிங் சீன அதிபராக உள்ளார். அடுத்த ஆண்டுடன், அவரின், 2வது அதிபர் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. எனவே, அரசியல் ரீதியாக, ஜி ஜின்பிங்கிற்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் ஆட்சியில் இருந்த கடந்த ஒன்பது ஆண்டுகளில் கட்சி நிறுவனர் மாவோ சேதுங்கிற்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.
Recommended Video

வாழ்நாள் முழுவதும் ஜி ஜின்பிங்தான் அதிபரா
முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவோ இரு முறை அதிபராக பதவி வகித்த பிறகு ஓய்வு பெற்றார். ஆனால் ஜி ஜின்பிங், அவரை போலல்லாமல் மூன்றாவது முறையாக அதிபராக தொடர்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 2018 இல் ஜி ஜின்பிங் ஒரு முக்கிய அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வந்தார். அதன்படி, ஒருவர், இருமுறைதான் அதிபராக இருக்க வேண்டும் என்ற சீன சட்டதிட்டம் மாற்றப்பட்டது. எனவே, ஒருவேளை, ஜி ஜின்பிங் தனது வாழ்நாள் முழுவதும் ஆட்சியில் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

கட்சி விவகாரங்கள்
ஜி ஜின்பிங்கிற்கு மட்டுமே இந்த சலுகை. மற்றபடி, பிரீமியர் லீ கெகியாங் உட்பட பெரும்பாலான அதிகாரிகள் இரண்டு பதவிக் காலங்களை முடித்த பிறகு ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று தசாப்தங்களாக, கட்சி விவகாரங்கள், குறிப்பாக முக்கிய நியமனங்கள், சித்தாந்தம் மற்றும் கட்சியை கட்டியெழுப்பும் விஷயங்கள் குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் உரையாற்றப்பட்டுள்ளது.

68 வயது
கட்சியின் நிறுவனர் மாவோவின் வாரிசான டெங் சியாவோபிங்கால் கட்சியின் உயர்மட்ட தலைமை தொடர்பாக இரண்டு முக்கிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்று, கட்சி நிர்வாகிகளில் ஓய்வு வயது 68 என்பதாகும். அதிகாரம் வாய்ந்த பொலிட்பீரோவின் 25 உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 12 பேர் அடுத்த ஆண்டு அக்டோபரில் 68 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களை ஓய்வு பெறச் சொல்லப் போகிறார்களா, அல்லது கட்சி விதிமுறையில் மாற்றங்கள் வருமா என்பது இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்று தீர்மானம்
வரலாற்று தீர்மானம் நிறைவேற்றப் போகிறோம் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பேச்சு வழக்கில், "வரலாற்றுத் தீர்மானம்" என்ற வார்த்தைக்கு சிறப்பு அரசியல் முக்கியத்துவம் என்று அர்த்தம். இதுதான் இதற்கு முன்பு நடந்த வரலாறு. கட்சியின், 100 ஆண்டு கால வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே, கட்சியின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்க, இப்படியான வரலாற்று தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்கிறார்கள். ஜி ஜிங்பிங்கிற்கு பதவி கால வரம்பிலிருந்து விலக்கு அளித்து அவரை அதிபராகவே தொடர வைப்பது இந்த தீர்மானத்தின் நோக்கம் என்றும், இதைத்தான் வரலாற்று தீர்மானம் என்று குறிப்பிடுகிறார்கள் என்றும் தகவல்கள் கிளம்பியுள்ளன. ஆனால், ஜி ஜிங்பிங்கிற்கு பிறகு, சீனாவின் அதிபர் யார் என்ற குழப்பத்தை, இது ஏற்படுத்தப் போகிறது என்கிறார்கள் சர்வதேச விவகாரத் துறை நிபுணர்கள்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications