கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் உலகம்...45,54,67,998 பேர் குணமடைந்தனர்
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 50,46,56,180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 45,54,67,998 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,22,757 பேர் உயிரிழந்துள்ளனர்
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 50,46,56,180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் 45,54,67,998 பேர் மீண்டுள்ளனர். 62,22,757 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 4,29,65,425பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா உலகம் முழுவதையும் தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. தற்போது கொரோனா இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டாலும் வெளி நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. எக்ஸ் இ வகை புதிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவில் இருந்து மீண்டு வரும் நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 4,51,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 50,46,56,180 பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 6,08,739 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 45,54,67,998 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஒரே நாளில் 1,186 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 62,22,757 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் 86,650 பேர் புதிதாக ஒரே நாளில் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 26,716 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் ஒரே நாளில் 93,001 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் 47,009 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இத்தாலி நாட்டில் 51,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில்1,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 1 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,21,777 பேராக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 190 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications