கொரோனா பாதிப்பு மரணங்கள் 7,604 பேராக அதிகரிப்பு - உலக அளவில் பிரேசில் முதலிடம்
உலகம் முழுவதும் ஒரே நாளில் 7,604 பேர் கொரோனா பாதிப்பினால் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,53,468 பேராக அதிகரித்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7,604 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 1,783 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,53,468 பேராக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வரும் வோர்ல்டோ மீட்டர்ஸ் தரவுகளின் படி உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் பிரேசில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 64, 903 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து பிரேசில் நாட்டில் 1,05,807 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,67,79,136 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 1,783 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,16,119 பேராக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,699 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,03,61,699 பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 816 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,98,484 பேராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 6,19,980 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிக மரணங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் 1,11,057 பேரும், ரஷ்யாவில் 1,34,545 பேரும், பிரிட்டன் நாட்டில் 128,126 பேரும் இத்தாலி நாட்டில் 127,542 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications