For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏற்றுமதி செய்வதற்கு முன்.. கடைசி நொடியில் தடுக்கப்பட்ட வேக்சின்.. சீனாவின் செயலால் கோபத்தில் கனடா!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் இருந்து கனடாவிற்கு செல்ல வேண்டிய கொரோனா தடுப்பு மருந்து கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. கொரோனா வேக்சினை ஏற்றுமதி செய்ய வேண்டிய கடைசி நொடியில் அதை சீனாவின் அரசுக்கு தடுத்து நிறுத்தி இருக்கிறது.

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க உலகம் முழுக்க இருக்கும் பல்வேறு நாடுகள் முயன்று வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலை, நோவாவேக்சின், சினோவேக்ஸ், பாரத் பயோ டெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உலகம் முழுக்க ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.

இதில் 10க்கும் மேற்பட்ட வேக்சின்கள் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கிறது. இறுதிக்கட்ட மனித சோதனையை ஆக்ஸ்போர்ட் பல்கலை உள்ளிட்ட பல்வேறு வேக்சின்கள் மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி மக்கள் நீதி மய்யத் தலைவர்... சுப்பிரமணியன்... கொரோனாவுக்கு உயிரிழப்பு புதுச்சேரி மக்கள் நீதி மய்யத் தலைவர்... சுப்பிரமணியன்... கொரோனாவுக்கு உயிரிழப்பு

சீனா நிறுவனம்

சீனா நிறுவனம்

இந்த நிலையில் சீனாவை சேர்ந்த கேன்சினோ (CanSino) நிறுவனம் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா வேக்சிங் சோதனையை செய்து உள்ளது. இந்த மருந்தின் சோதனை முடிவுகள் முன்னுக்கு பின் முரணாக வந்துள்ளது. அதாவது சிலர் மீது இந்த வேக்சின் சிறப்பாக செயலாற்றி இருக்கிறது. ஆனால் சிலருக்கு இந்த வேக்சின் பயனளிக்கவே இல்லை. இதனால் இந்த வேக்சினின் பாதுகாப்பு தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

தடுத்து நிறுத்தியது

தடுத்து நிறுத்தியது

இந்த நிலையில்தான் சீனாவில் இருந்து கனடாவிற்கு செல்ல வேண்டிய கேன்சினோ கொரோனா தடுப்பு மருந்து கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. கேன்சினோ நிறுவனத்தின் கொரோனா வேக்சினை ஏற்றுமதி செய்ய வேண்டிய கடைசி நொடியில் அதை சீனாவின் அரசுக்கு தடுத்து நிறுத்தி இருக்கிறது. கேன்சினோ தடுப்பு மருந்து கனடாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது ஆகும்.

எங்கு உருவாக்கப்பட்டது

எங்கு உருவாக்கப்பட்டது

கேன்சினோ வேக்சினுக்கு Ad5-nCoV என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கனடாவின் தொழில்நுட்பத்தில் சீனாவில் உருவாக்கப்பட்டது.இதற்காக கனடாவின் மத்திய நோய் ஆராய்ச்சி மையமும் கேன்சினோ நிறுவனமும் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்த மருந்தின் இறுதிக்கட்ட சோதனை கனடாவில் நடக்கும். மருந்தின் உரிமையில் 50% கனடாவிற்கு கொடுக்கப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இதன் முதல் இரண்டு கட்ட சோதனை சீன ராணுவம் மூலம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் மூன்றாம் கட்ட சோதனைக்கு இதை ஒப்பந்தத்தின் படி கனடா அனுப்ப வேண்டும். ஆனால் சீனா இதற்கு அனுமதிக்கவில்லை. சீனாவின் துறைமுகத்தில் ஏற்றுமதிக்கு இந்த கேன்சினோ வேக்சின் தயாராக இருந்த நிலையில், சீன அரசு மூலம் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

முன்னதாக ஹுவாவே நிறுவனத்தின் அதிகாரி மென்ங் வான்சோவ் கனடாவில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கோரிக்கையின் பெயரில் இவர் கைது செய்யப்பட்டார். இதனால் கனடா மீது சீனா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் கடந்த மாதம் மூன்று கனடா மக்கள் சீனாவினை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்டனர்

இதனால் இரண்டு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே தற்போது கேன்சினோ தடுப்பு மருந்தை கனடாவிற்கு ஏற்றுமதி செய்ய சீனா தடுத்துள்ளது. இதனால் அமெரிக்காவிடம் இருந்து மருந்துகளை வாங்க கனடா முடிவு செய்துள்ளது. சீனாவிடம் மருந்துகளை வாங்காமல் கனடாவின் நோவாவேக்சின் நிறுவனத்திடம் இருந்து மருந்துகளை வாங்க கனடா முடிவு செய்துள்ளது .

English summary
Corona Vaccine: China stops the export to Canada at the last minute due to political issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X