For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏப்ரல் 8க்கு குறி வைத்த சீனா.. வுஹனில் ஏற்படும் அடுத்தடுத்த மாற்றங்கள்.. உலக நாடுகள் சந்தேகம்!

கொரோனா வைரஸால் முதல் முதலில் பாதிக்கப்பட்ட இடமான சீனாவின் வுஹன் நகரம் வரும் ஏப்ரல் 8ம் தேதி திறக்கப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸால் முதல் முதலில் பாதிக்கப்பட்ட இடமான சீனாவின் வுஹன் நகரம் வரும் ஏப்ரல் 8ம் தேதி திறக்கப்பட உள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது.

Recommended Video

    கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது சீனா

    கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுஹன் நகரத்தில்தான் தோன்றியது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த வைரஸ் முதலில் சீனா முழுக்க பரவியது. அதன்பின் ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் வைரஸ் பரவியது.

    தற்போது உலகம் முழுக்க 150 நாடுகளுக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி உள்ளது. முக்கியமாக இத்தாலியில் கொரோனா வைரஸ் வேகம் அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸால் 63,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6077 பேர் பலியாகி உள்ளனர்.

    கொரோனா குறைந்தது

    கொரோனா குறைந்தது

    ஆனால் மாறாக சீனாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று முன்பு வரை, கடந்த ஐந்து நாட்களாக சீனாவின் வுஹனில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. ஆம் அங்கு மொத்தமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேற்று மட்டும் சீனாவில் 78 பேருக்கு கொரோனா தாக்கியது.

    கொரோனா எத்தனை பேருக்கு தாக்கியது

    கொரோனா எத்தனை பேருக்கு தாக்கியது

    இதில் 74 பேர் வெளிநாட்டில் இருந்து சீனா வந்தவர்கள். மீதம் இருக்கும் நான்கு பேரில் ஒருவர் மட்டும் வுஹன் நகரத்தை சேர்ந்தவர். அதாவது கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பின் நேற்றுதான் வுஹனில் கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. நேற்று சீனாவில் மொத்தம் 7 பேர் இந்த வைரஸால் பலியானார்கள். இதில் 7 பேரும் வுஹன் நகரத்தை சேர்ந்தவர்கள். இது ஓரளவிற்கு நிம்மதி அளிக்க கூடிய செய்தியாகும்.

    சீனாவின் கொரோனா கணக்கு

    சீனாவின் கொரோனா கணக்கு

    சீனாவில் இதுவரை 81,171 பேருக்கு கொரோனா பாதித்து இருக்கிறது. இதில் இதுவரை 3,277 பேர் பலியாகி உள்ளனர். இது ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இதில் 73,159 பேர் இதுவரை குணப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் வீடு திரும்பி உள்ளனர். இன்னும் 8012 பேர்தான் மருத்துவமனையில் இருக்கிறார்கள். இவர்களும் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.

    தளர்த்த முடிவு

    தளர்த்த முடிவு

    இதனால் சீனாவில் கட்டுப்பாடுகளை குறைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி சீனாவில் அதிகமாக கொரோனா பாதித்த ஹூபேய் நகரம் திறக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் சீனாவின் சிங்ஜாங் மற்றும் சிச்சுன் ஆகிய நகரங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் சீனாவின் பெய்ஜிங் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதேபோல் வுஹன் நகரத்தை அடுத்த மாதம் 8ம் தேதி திறக்க உள்ளனர்.

    மொத்தமாக வெளியே இல்லை

    மொத்தமாக வெளியே இல்லை

    ஆம் அடுத்த மாதம் 8ம் தேதி முதல் வுஹனில் இளைஞர்கள் வெளியே வரலாம். ஆனால் வயதானவர்கள் வெளியே வர முடியாது. இளைஞர்கள் க்யூ ஆர் கோட் மூலம் வெளியே வருவதை சீன அரசு கண்காணிக்கும். எல்லோருக்கும் ஒரு க்யூ கோட் அளிக்கப்படும். அதை சோதனை செய்து அவர்கள் உடல்நிலை சரியாக இருக்கிறதா என்று கண்டுபிடித்துவிட்டு, பின் வெளியே அனுப்புவார்கள்.

    ஆனால் சந்தேகம்

    ஆனால் சந்தேகம்

    ஆனால் சீனா இப்படி செய்ய கூடாது என்று பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா உண்மையான கொரோனா பாதித்தவர்கள் எண்களை மறைக்கிறது. வுஹனில் கண்டிப்பாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு எத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டது என்பதை சீன அரசு மறைக்கிறது. சீனா இதில் எதோ தவறு செய்வது போல சந்தேகம் ஏற்படுகிறது.

    பெரிய தவறு நடக்கிறது

    பெரிய தவறு நடக்கிறது

    ஒன்று சீனா புதிய நோயாளிகள் குறித்த தகவலை மறைக்க வேண்டும். இல்லையென்றால் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டு அதை மறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். சீனா இப்போது செய்யும் செயல் பெரிய ரிஸ்க். இது நிறைய பிரச்சனைக்கு வழி வகுக்கும் என்கிறார்கள். கொரோனா எப்போது தோன்றியதோ அப்போதில் இருந்தே வுஹன் நகரம் மர்மங்கள் நிறைந்த நகரமாக இருக்கிறது.

    English summary
    Coronavirus: China will open Wuhan in two weeks? Few questions araised.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X