For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேங் வார்.. கொரோனாவால் மாறி மாறி தாக்கிக் கொண்ட 200+ குரங்குகள்.. ஏன்?.. அதிர வைக்கும் வீடியோ!

கொரோனா வைரசால் தாய்லாந்து நாட்டில் குரங்குகள் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

பாங்காக்: கொரோனா வைரசால் தாய்லாந்து நாட்டில் குரங்குகள் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ பெரிய வைரலாகி உள்ளது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

    கேங் வார்.. கொரோனாவால் மாறி மாறி தாக்கிக் கொண்ட 200+ குரங்குகள்.. ஏன்?.. அதிர வைக்கும் வீடியோ!

    கொரோனா வைரஸ் மக்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளை எப்படி கொண்டு வந்ததோ அதேபோல் வேறு பல யோசிக்க முடியாத பிரச்சனைகளை உலக நாடுகள் மத்தியில் கொண்டு வந்து உள்ளது. அதில் முதலாவது பொருளாதார சீர்குலைவு. கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

    இந்திய மார்க்கெட் தொடங்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி என்று பல நாடுகளின் மார்க்கெட் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க வேண்டுமா.. இதோ பயனுள்ள டிப்ஸ் கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க வேண்டுமா.. இதோ பயனுள்ள டிப்ஸ்

    உலகம்

    அதே போல் உலகம் முழுக்க இதனால் மிகப்பெரிய அளவில் சுற்றுலா துறை மோசமாகி படுத்துள்ளது. முக்கியமாக சுற்றுலாத்துறையை நம்பி இருக்கும் ஆசிய நாடுகள் மோசமான இழப்பை சந்தித்துள்ளது. இதில் சீனா பெரிய இழப்பை சந்தித்துள்ளது. சுற்றுலா வருவாயை நம்பி இருக்கும் தாய்லாந்து போன்ற சிறிய நாடுகளும் மிக மோசமாக சரிவை சந்தித்துள்ளது. கொரோனா காரணமாக தாய்லாந்துக்கு மக்கள் செல்வது மொத்தமாக குறைந்துள்ளது.

    மக்கள் வருகை

    மக்கள் வருகை

    தாய்லாந்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை கடந்த ஒரே வாரத்தில் 77% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விசா பெறுவதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளது. இந்த நிலையில் மத்திய தாய்லாந்தில் லோப்பூரி என்ற பகுதியில் 200க்கும் அதிகமான குரங்குகள் சாலையில் மாறி, மாறி தாக்கி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ வைரல் ஆகியுள்ளது. இந்த லோப்பூரி மிகப்பெரிய சுற்றுலாத்தலம் ஆகும்.

    அதிகபேர்

    அதிகபேர்

    பழனி மலை போல இங்கு குரங்குகள் அதிகம் இருக்கும். இங்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா வரும் போது, அந்த குரங்குகளுக்கு உணவு வழங்குவது வழக்கம். தாய்லாந்து வேகமாக முன்னேறிய காரணத்தால், இந்த குரங்குகளுக்கு காட்டுக்குள் செல்லவும் வழியில்லை. வேறு எங்கும் உணவு கிடைக்காது. அதனால் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் வாழைப்பழம், உணவு ஆகியவற்றை உண்டுதான் இவைகள் உயிர் வாழ்ந்து வருகிறது.

    வார்

    வார்

    இந்த நிலையில்தான் தற்போது சுற்றுலா பயணிகள் வரவு குறைவால், அங்கு குரங்குகள் உணவு இன்றி ஒருவாரமாக தவிக்கிறது. இருக்கும் சுற்றுலா பயணிகளும் கொரோனா அச்சத்தால் குரங்குகள் அருகே செல்லவே அச்சப்படுகிறார்கள். இதனால் தற்போது குரங்குகளுக்கு இடையே உணவுக்காக சண்டை வந்துள்ளது. நேற்று ஒரே ஒரு குரங்கிடம் கிடைத்த பழத்தை பிடுங்கவே இரண்டு கேங் குரங்குகள் சண்டை போட்டு இருக்கிறது. இதுதான் வீடியோவாக வெளியே வந்துள்ளது.

    இரண்டு கேங்

    இரண்டு கேங்

    ஆம் ஒரு வாழைப்பழத்திற்காக அங்கு பெரிய போரே நடந்துள்ளது. அங்கு தற்போது குரங்குகள் உணவு கண்டுபிடிப்பதற்காக கேங் கேங்காக பிரிந்து சண்டை போட்டு வருவதற்காக விலங்குகள் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த சண்டையில் இதுவரை 7 குரங்குகள் பலியாகி உள்ளது. அமைதியாக இருந்த குரங்குகள் இப்போது பசியால் மூர்க்கமாக மாறி, இப்படி அடித்துக் கொள்கிறது என்றுள்ளனர். கொரோனவால் இன்னும் என்ன மாதிரியான பாதிப்புகள் எல்லாம் வரும் என்பதை யூகிக்கவே முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

    English summary
    Coronavirus: Gang War between Monkeys in Thailand due to Epidemic - Here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X