For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல நூறு உடல்கள்.. பெரிய பெரிய குழிகள்.. காட்டிக்கொடுத்த சாட்டிலைட்.. உண்மையை மறைக்கும் ஈரான்!

ஈரானில் கொரோனா வைரஸில் பலியானவர்களை புதைப்பதற்காக பெரிய சுடுகாடு தோண்டப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரஸில் பலியானவர்களை புதைப்பதற்காக பெரிய சுடுகாடு தோண்டப்பட்டுள்ளது. ஈரான் அரசு கொரோனா மூலம் பலியானவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

Recommended Video

    மருந்து யாருக்கு சொந்தம்... அமெரிக்கா- ஜெர்மனி இடையே மோதல்?

    மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக ஈரான் மற்றும் துபாயில் இந்த வைரஸ் வேகம் எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ ஈரான்தான் காரணம் என்று அண்டை நாடுகள் புகார் அளித்துள்ளது.

    முக்கியமாக ஈரானின் பொறுப்பற்றதன்மைதான் வைரஸ் பரவ காரணம் என்று சவுதி அரேபியா ஆகிய நாடுகள் புகார் அளித்துள்ளது. ஈரானும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

    என்ன திணறல்

    என்ன திணறல்

    இந்த வைரஸ் காரணமாக ஈரானில் இதுவரை 13,938 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு வைரஸ் காரணமாக 724 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 15 நாட்களில் ஈரானில் இத்தனை பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. முக்கியமாக அங்கு வைரஸ் பாதித்த பல பேர் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    என்ன அச்சம்

    என்ன அச்சம்

    ஆம் அங்கு வைரஸ் பாதித்தவர்களை சோதனை செய்ய போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதேபோல் நோய் பாதித்தவர்களை தனியாக வைத்து சிகிச்சை அளிக்கவும் போதுமான வசதிகள் இல்லை என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரானை தங்கள் நாட்டில் பலியானார்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    ஈரானில் அரசு புள்ளிவிவரத்தின்படி மொத்தம் 724 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் உண்மையில் அங்கு 2000 பேருக்கும் அதிகமாக பலியாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதாவது வெளியே உள்ள நாடுகளுக்கு தெரிய கூடாது என்பதால் ஈரான் பொய்யான எண்ணிக்கையை சொல்கிறது என்று கூறி உள்ளனர். ஈரானை சேர்ந்த தைரியமான செய்தியாளர்கள் பலர் இந்த உண்மையை வெளியிட்டுள்ளனர்.

    என்ன உண்மை

    என்ன உண்மை

    பலர் இந்த வைரஸால் பலியாகி உள்ளனர். 2 எம்பிக்கள் பலியாகி உள்ளனர், 4 முன்னாள் எம்பிக்கள் பலியாகி உள்ளனர். இதெல்லாம் போக அரசு உயர் அதிகாரிகள் சிலர் பலியாகி உள்ளனர். ஆனால இதை எல்லாம் அரசு மொத்தமாக மறைகிறது. தொடர்ந்து கொரோனா குறித்த உண்மைகளை ஈரான் மறைகிறது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. ஈரானில் கொரோனா வைரஸில் பலியானவர்களை புதைப்பதற்காக பெரிய சுடுகாடு தோண்டப்பட்டுள்ளது.

    சுடுகாடு எப்படி

    சுடுகாடு எப்படி

    இந்த சுடுகாடு மொத்தம் 3000 பேரை புதைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குவாம் பகுதியில் இந்த சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழிகள் தோண்டும் பணி கடந்த பிப்ரவரி 21ம் தேதி தொடங்கி கடந்த வாரம் முடிந்துள்ளது. தற்போது அங்கு கருப்பு பைகளில் பிணங்களை புதைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தினமும் பல நூறு கணக்கில் அங்கு பிணங்கள் புதைக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

    எத்தனை பிணங்கள்

    எத்தனை பிணங்கள்

    அங்கு இதுவரை 1000 க்கும் அதிகமான பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளது என்று அங்கு பணியாற்றும் பணியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அரசு வெறும் 700 பேர்தான் பலியானார்கள் என்று பொய் சொல்கிறது என்று அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக சாட்டிலைட் புகைப்படங்களும் கூட வெளியாகி உள்ளது. ஈரானில் தோண்டப்பட்டு உள்ள சுடுகாட்டின் புகைப்படம் அப்படியே சாட்டிலைட் புகைப்படத்தில் தெரிய வந்துள்ளது.

    எவ்வளவு பெரியது

    எவ்வளவு பெரியது

    இந்த புகைப்படங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மொத்தம் 200 மீட்டர் நீளத்திற்கு இந்த குழி தோண்டப்பட்டு இருக்கிறது. இதை சுற்றி தற்போது இன்னொரு குழியும் தோண்டப்பட்டு வருகிறது. ஈரான் அரசு இதனால் கடும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. மக்களுக்கு உண்மையை தெரிவிக்காமல் அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருவதாக அண்டை நாடுகள் கடுமையாக புகார் வைக்க தொடங்கி உள்ளது.

    English summary
    Coronavirus: Iran opens large graveyards, Satellite picture reveals the truth.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X