சீனா...கொரோனா தடுப்பு மருந்து...நவம்பரில் மனித பயன்பாட்டுக்கு வருகிறது!!
பீஜிங்: சீனாவில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாகவும், வரும் நவம்பர் மாதம் மனித பயன்பாட்டுக்கு வரும் என்று அந்த நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் நான்கு கொரோனா தடுப்பு மருந்துகள் தயாராகி வருகின்றன. இவற்றில் ஏற்கனவே மூன்று மருந்துகள் ஆய்வுகளுக்கு இடையே பல்வேறு கட்டங்களில் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு தடுப்பு ஊசி அந்த நாட்டின் ராணுவ வீரர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த மனித பரிசோதனை சீனாவில் கடந்த ஜூன் மாதத்தில் துவங்கிவிட்டது.

இதுகுறித்து அந்த நாட்டின் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய தலைவர் கைசென் வு, ''மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடந்து வருகிறது. வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் மனித பயன்பாட்டுக்கு வந்துவிடும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பு மருந்தை தானும் கடந்த ஏப்ரல் மாதம் செலுத்திக் கொண்டதாகவும், அதன்பின்னர் தனக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று கைசென் தெரிவித்துள்ளார்.
சீனாவின் நேஷனல் பார்மாசூட்டிகல் குரூப் (சைனோபார்ம்), அமெரிக்க பங்குச் சந்தையில் இடம் பெற்று இருக்கும் சைனோவாக் பயோடெக் எஸ்விஏ.ஓ ஆகியவை இணைந்து மூன்று தடுப்பு மருத்துகளை தயாரித்து வருகின்றன. நான்காவது தடுப்பு மருந்தை கேன்சைனோ பயாலஜிக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பு மருந்துதான் கடந்த ஜூன் மாதம் ராணுவத்தினருக்கு செலுத்தப்பட்டது.
சைனோபார்ம் கடந்த ஜூன் மாதம் தெரிவித்து இருந்த தகவலில், ''நடப்பாண்டு இறுதியில் தடுப்பு மருந்து மனித பயன்பாட்டுக்கு வந்து விடும். மூன்றாம் கட்ட மனித பரிசோதனையில் இருக்கிறது'' என்று தெரிவித்து இருந்தது.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 925,000 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்த நிலையில் பல்வேறு தடுப்பு மருந்துகள் தயாராகி வரும் நிலையில் இன்னும் எந்த தடுப்பு மருந்தும் மனித பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications