For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

115 டீ கப், 25 பேக்.. இறந்து கரை ஒதுங்கிய ராட்சச திமிங்கலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக்!

இந்தோனேசிய கடலில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த 6 கிலோ பிளாஸ்டிக்

    ஜகர்த்தா: இந்தோனேசிய கடலில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    உலகம் முழுக்க கடலில் வாழும் உயிரினங்கள் சுற்றுசூழல் மாறுபாடு காரணமாக பெரிய சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. கடலில் கலக்கப்படும் கழிவுகள் காரணமாக அவைகளின் வாழ்வாதாரம் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது,

    இந்த நிலையில்தான் இந்தோனேசியாவின் கபோடா தீவில் உள்ள நேஷனல் பார்க் கடற்கரையில் பெரிய திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கி இருக்கிறது.

    பெரும் அதிர்ச்சி

    முதல் முறையாக இவ்வளவு பெரிய திமிங்கலம் அந்த கடல் பகுதியில் ஒதுங்கி உள்ளது. இந்த திமிங்கலத்தை கரைக்கு எடுத்து வந்த அதிகாரிகள் பின் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அந்த திமிங்கலத்தின் வயிறு கிழிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில் அதன் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    என்ன எல்லாம் இருந்தது

    அந்த திமிங்கலத்தின் வயிற்றில் கடினமான பிளாஸ்டிக் 19, பிளாஸ்டிக் பாட்டில் 4, பிளாஸ்டிக் பேக் 25, செருப்புகள் 2, பிளாஸ்டிக் கயிறுகள் 3.26 கிலோ, பிளாஸ்டிக் கப் 115 இருந்துள்ளது. இது எல்லாமும் அதன் குடலில் சிக்கி இருந்துள்ளது. எந்த பொருளும் செரிமானம் அடையவில்லை.

    எதிர்ப்பு

    இந்த சம்பவத்திற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மக்கள் பிளாஸ்ட்டிக் பொருட்களை நீரில் தூக்கி எறிந்த காரணத்தால்தான் இந்த சம்பவம் நடந்தது என்று தெரிவித்துள்ளனர். இதற்கு எதிராக சட்ட போராட்டம் செய்ய போவதாகவும் கூறியுள்ளனர்.

    இன்னும் முடிவாகவில்லை

    ஆனால் அதேசமயம் இந்த திமிங்கலத்தின் உடல்கூறு ஆய்வு இன்னும் முடியவில்லை. அதனால் இதன் இறப்பிற்கு பிளாஸ்ட்டிக்தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர். என்ன இருந்தாலும், திமிங்கலத்தின் வயிற்றில் இத்தனை பிளாஸ்டிக் இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Dead Whale found in Indonesia had loads of ingested plastic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X