மலேசியா சோகம்.. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு.. 9 பேர் மாயம்
கோலாலம்பூர்: மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல மேலும் 9 பேர் இதில் சிக்கி இருக்கிறார்கள் என்றும், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
பொதுவாக மலேசியாவில் நிலச்சரிவு காரணமாக அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த உயிரிழப்புகள் கவனமாக தவிர்க்கப்பட்டு வந்தன.
இவ்வாறு இருக்கையில் நேற்று அதிகாலை படாங் கலியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 94 பேர் சிக்கிக்கொண்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிலச்சரிவு
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சுமர் 50 கி.மீ தொலைவில் உள்ள படாங் கலி பகுதியானது பிரபலமான மலைப்பகுதியாகும். இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு சட்டத்திற்கு புறமான வகையில் சில முகாம்களும் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு இருக்கையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக படாங் கலியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மண் சரிந்து சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு நிலத்தை அப்படியே மூடியிருக்கிறது. இதில் சோகம் என்னவெனில் இந்த நிலச்சரிவில் 94 பேர் இருந்த முகாம் முழுமையாக சிக்கிக்கொண்டது. விவரம் அறிந்து உடனடியாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் இறங்கினர்.

9 பேர் மாயம்
மொத்தமாக 135 மீட்பு படையினர், 7 மோப்ப நாய்கள் இது தவிர அகழ்வாராய்ச்சியாளர்கள் சிலர் என பெரிய அளவில் மீட்பு பணிகள் தொடங்கின். 94 பேரில் தற்போது வரை 61 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்த நிலையில் இன்று ஒரு பெண் 2 குழந்தைகள் உட்பட 7 பேரின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் தலைவர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், "இந்த பகுதியில் சேற்றின் எடை அதிகமாக இருக்கிறது. நாங்கள் இன்னும் 9 பேரை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். இவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. மட்டுமல்லாது மீட்பு பணிக்கு இடையூறாக மழை வேறு குறுக்கீடு செய்கிறது. எப்படியாயினும் அவர்களை கண்டுபிடித்து விடுவோம்" என்று கூறியுள்ளார்.

மீட்பு பணியில் சுணக்கம்
நோரஸாம் காமிஸ் கூறியதை போல கனமழை கரணமாக மீட்பு பணியில் சிறிது தோய்வு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 7 மணியளவில் தொடங்கிய மீட்பு பணிகள் கனமழை காரணமாக இரவு முழுவதும் நிறுத்தப்பட்டன. மழை நின்ற பின்னர் இன்று காலை 8.30 மணியளவில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. படாங் கலி பகுதியில் இயங்கி வந்துள்ள இந்த முகாம் சட்ட விரோதமானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், 100 அடி உயரத்திலிருந்து சுமார் 4,50,000 கனமீட்டர் அளவு மண் சரிந்து இந்த முகாமை மூடியிருக்கிறது.

நிவாரணம்
இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருப்பது கடினம் என்று விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விபத்தையடுத்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் உள்ள வன முகாம்கள் மற்றும் ஆஃப்-ரோடுகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.1.8 லட்சமும், உயிர் பிழைத்த குடும்பங்களுக்கு சுமார் ரூ.18 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அந்நாடு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்திருக்கிறார். இதேபோல கடந்த ஆண்டு பெய்த கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 7 மாநிலங்களில் மட்டும் 21 ஆயிரம் பேர் தங்கள் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications