உள்ளூர் சட்டப்படியே எங்களது தூதரக ஊழியர்களுக்கு சம்பளம் தருகிறோம் - அமெரிக்கா
வாஷிங்டன்: இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அந்தந்த நாட்டு சட்டத் திட்டத்தின்படிதான் ஊதியம் வழங்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம், நியூயார்க்கில், இந்தியத் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே மோசமான முறையில், கைது செய்யப்பட்ட விவகாரத்தால் இந்தியா அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்தது இந்தியா. அதன்படி இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரத்தையும், ஊழியர்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு தற்போது பதிலளித்துள்ளது அமெரிக்கா. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பொதுவாக, உலக நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பள விகிதங்கள், அந்த நாட்டு சட்ட திட்டங்களின்படிதான் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன என்றார் அவர்.
கிடைத்துள்ள தகவல்களின்படி, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் நாட்டில் உள்ள பிற துணைத் தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் இந்தியர்களுக்கு, அதாவது சமையலர்கள், டிரைவர்களுக்கு மாதம் ரூ. 12,000 முதல் ரூ. 15,000 வரை சம்பளமாக தரப்படுகிறதாம். இது அமெரிக்க டாலரில் 200 முதல் 250 டாலராகும்.
ஆனால் நியூயார்க்கில் குறைந்தபட்ச ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு 9.47 டாலரை நிர்ணயித்துள்ளது அமெரிக்க அரசு. இந்த ஊதியத்துடன் ஒப்பிட்டால் இந்தியாவில் உள்ள தூதரக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மகா மட்டகரமானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications