For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதிகளை ஒழிப்பதில் பாகுபாடு கூடாது: பாக். பிரதமரிடம் ஒபாமா வலியுறுத்தல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை ஆதரிக்கும், பாகிஸ்தானின் மனப்போக்கை கண்டிக்கும் வகையில் தீவிரவாதிகளை ஒழிப்பதில் பாகுபாடு காட்ட கூடாது என பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப்பிடம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து வெள்ளை மாளிகை துணை செய்தித்தொடர்பாளர் எரிக் ஸ்கல்ட்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

Don't discriminate among terror groups: Obama to Sharif

பாகிஸ்தானில் ஜனநாயகம் நிலைக்கவும், அங்குள்ள மக்கள் மேம்பாடு அடையவும் ஒத்துழைப்பை அளிப்போம் என நவாஸ் ஷெரிப்பிடம் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்காவும், பாகிஸ்தானும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளான நாடுகள் என்பதை சுட்டிக்காட்டிய ஒபாமா, இதனால் பாகிஸ்தான் மக்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதையும் நினைவுகூர்ந்தார்.

எனவே, அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டு, பிரந்தியத்தை சீர்குலைக்க முயலும் தீவிரவாதத்தை முறியடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முந்தைய சந்திப்புகளிலும், தற்போதைய சந்திப்பின்போதும் தீவிரவாதிகளை ஒழிப்பதில் எவ்வித பாகுபாடும் காட்டப்படக் கூடாது என பாகிஸ்தானிடம் வலியுறுத்துவதே அதிபர் பராக் ஒபாமாவின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்துவரும் நிலையில், தனது நாட்டுக்கு எதிரான தீவிரவாதத்துக்கு எதிராக மட்டும் அது நடவடிக்கை எடுப்பதை மட்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Even as visiting Pakistan Prime Minister Nawaz Sharif kept up his tirade against India, the US said President Barack Obama had made clear to him that Pakistan should not discriminate among terrorist groups.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X