For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கேரட்' என நினைத்து காரை கடித்த கழுதை: உரிமையாளருக்கு அபராதம்?

By BBC News தமிழ்
|

உணவுப் பொருள் என்று நினைத்து புல்வெளிக்கு அருகே நிறுத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் காரை கடித்த கழுதை ஒன்றால் , காருக்கு ஏற்பட்ட சேதத்துக்கு கழுதையின் உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டுமா என்பது குறித்து ஜெர்மனி நீதிமன்றம் வியாழக்கிழமையன்று முடிவு செய்யவுள்ளது.

2016-ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதியன்று, மார்கஸ் ஜான் என்பவர் ஹெஸி மாநிலத்தில் உள்ள வோகல்ஸ்பர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு புல்வெளியை ஒட்டிய கார் நிறுத்துமிடத்தில் தனது ஆரஞ்சு நிற மெக்லாரென் ஸ்பைடர் காரை நிறுத்தியிருந்தார்.

தனது காரின் பின்பகுதியை, விட்டஸ் என்ற கழுதை கடித்து விட்டதாக மார்கஸ் புகார் கூறினார்.

கேரட் என நினைத்து விட்டஸ் காரை கடித்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், தனது கழுதையால் ஏற்பட்ட காருக்கு ஏற்பட்ட சேதத்துக்கு 6000 பவுண்டுகள் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு அதன் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புல்வெளிக்கு அருகே 3 லட்சம் பவுண்டுகள் மதிப்பிருக்கலாம் என்று கூறப்பட்ட காரை அதன் உரிமையாளர் நிறுத்தியிருக்க கூடாது என்றும், அதனால் தனது கழுதை குற்றவாளி அல்ல என்றும் கழுதையின் உரிமையலர் வாதிடுகிறார்.

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கில் வியாழக்கிழமையன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
A donkey mistook orange colour Mclaren sports car for carrot and bite it. The owner of the donkey argues that he is not at fault.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X