ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள்
மெக்சிகோ சிட்டி: உலகில் இப்போது மத்திய கிழக்கில் மோதல் வெடித்துள்ளது. அந்த மோதல் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது. இதற்கிடையே டூம்ஸ்டே மீன் எனப்படும் ஓர்பிஷ் (Oarfish) மீன்கள் மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் கண்டறியப்பட்டன. இதனால் மத்திய கிழக்கு மோதல் உலகப் போராக மாறுமோ என்ற விவாதம் எழுந்துள்ளது.
மத்திய கிழக்கில் என்ன நிலைமை இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு ஈரான்- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே மோதல்கள் தொடர்கிறது. இதில் பிற மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. இதற்கிடையே டூம்ஸ்டே மீன் எனப்படும் ஓர்பிஷ் (Oarfish) மீன்கள் மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் கண்டறியப்பட்டன.

டூம்ஸ்டே மீன்
அதில் ஒன்று இல்லை.. இரண்டு மீன்கள் கரையொதுங்கியது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 30 அடி வரை வளரக்கூடிய இந்த அரிதான உயிரினங்கள் எப்போதும் ஆழ்கடலில் தான் இருக்கும். மிக மிக அரிதாகவே மேலே வரும். ஆனால், இதுபோல மேலே வரும்போது எல்லாம் இயற்கை பேரழிவு ஏற்படுமாம். அதாவது இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என்பதற்கான சிக்னல் தான் இந்த டூம்ஸ்டே மீன்கள் என்கிறார்கள்.
மீன்
கடற்கரையில் இரண்டு சகோதரிகள் நடந்து சென்றபோது, தூரத்தில் ஏதோ மின்னுவதைப் பார்த்துள்ளனர். சாதாரணமாக 3,000 அடி ஆழத்தில் வாழும் ஓர்பிஷ் மீன்கள் ஆழமற்ற நீரில் தத்தளிப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சகோதரிகளில் ஒருவரான மோனிகா பிட்டிங்கர், ரிப்பன் போன்ற தோற்றமளிக்கும் இந்த மீன்களை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அவர் மேலும், "அது மின்னி பிரகாசமாக இருந்தது. நாங்கள் அருகில் சென்று பார்த்தபோது, இது நிஜமாக இருக்க முடியாது எனத் தோன்றியது" என்று மோனிகா பிட்டிங்கர் தெரிவித்தார்.
தத்தளிப்பு
மோனிகாவின் சகோதரிக்கு மீன்கள் இதுபோல தத்தளிப்பதைப் பார்க்க முடியவில்லை. இதனால் அவர் மீன்களை மீண்டும் கடலுக்குள் அனுப்ப முயன்றார். "அங்கிருந்தோர் அனைவரும் சும்மா நின்றிருக்க, என் சகோதரி அந்த மீனை மீண்டும் கடலுக்குள் அனுப்ப முயன்றார். ஆனால், அது என்னவென்று தெரியாததால் யாரும் உதவிக்கு வரவில்லை. பலரும் தயங்கினர், அவர்களை நான் குறை சொல்லமாட்டேன்," என்றும் அவர் கூறினார்.
ஓர்பிஷ் மீன்கள் கிரில் உணவுகளை உண்பவை.. அரிதாகவே மேற்பரப்பிற்கு வரும். நிலநடுக்கங்கள், சுனாமிகள் போன்ற பேரழிவுகளுடன் இவை தொடர்புடையதாகக் கூறப்பட்டாலும், இவற்றின் தோற்றங்களுக்கும் இயற்கை பேரிடர்களுக்கும் இடையே உறுதியான அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
உலகப் போர்
ஆனாலும், இந்த ஓர்பிஷ் வருகை ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. சிலர் இதை ஓர் அபசகுனமாகவும், மற்றவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க இயற்கை நிகழ்வாகவும் பார்க்கின்றனர். இன்னும் சிலரோ மத்திய கிழக்கில் மோதல் வெடித்துள்ள சூழலில், அது உலகப் போராகக் கூட மாறலாம்.. அதை உணர்த்தும் வகையிலேயே இந்த டூம்ஸ்டே மீன் வந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள்.. இருப்பினும், முன்பே குறிப்பிட்டது போல இதற்கு எந்தவொரு அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை. மக்களின் நம்பிக்கை சார்ந்ததாகவே இது பார்க்கப்படுகிறது.
-
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications