உணவு-தண்ணீர் கிடைக்கல.. அப்படியே மயங்கி விழுந்து 205 யானைகள் பலி.. கென்யாவில் அகோர வறட்சி.. சோகம்
நைரோபி: கென்யாவில் 40 ஆண்டு காணாத வறட்சி நிலவும் நிலையில் உணவு, தண்ணீர் இன்றி எலும்பும், தோலுமாக மாறி அப்படியே மயங்கி விழுந்து 205 யானைகள் பலியாகி உள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றாக கென்யா உள்ளது. இது வெப்பமண்டல நாடாக உள்ளது. இதனால் இந்தியாவை ஒப்பிடும்போது பொதுவாக கென்யாவில் அதிக வெப்பம் நிலவும்.
இந்நிலையில் தான் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தால் பெரிய பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதற்கு கென்யாவும் விதிவிலக்கல்ல.

வறட்சியின் பிடியில் கென்யா
இங்கு இந்த ஆண்டு தொடக்கம் முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக பெய்யும் பருவமழை பொய்த்து போய்விட்டது. இதனால் கென்யா கடும் வறட்சியை நோக்கி சென்றது. இந்நிலையில் தான் தற்போது கென்யாவின் வறட்சி என்பது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வறட்சியால் வனவிலங்குகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. 40 ஆண்டுகள் இல்லாத வகையில் வறட்சியில் அகோர பிடியில் கென்யா சிக்கி உள்ளது.

205 யானைகள் பலி
யானை, வரிக்குதிரைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உணவுகள் கிடைக்காமல் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி இறந்து வருகின்றன.இந்நிலையில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 205 யானைகள் இறந்துள்ளதாக ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளன. கென்யாவை பொறுத்தமட்டில் ஆப்பிரிக்கா வகை யானை ரகங்கள் அதிகமான உள்ளன. இந்த யானைகள் இந்தியாவில் உள்ள யானைகளை விட அதிக எடையுடன், பெரிய காதுகளுடன், உயரமாக கம்பீரமாக இருக்கும். இந்த யானைகள் கூட வறட்சியில் உணவு இன்றி உடல் எடை குறைந்து எலும்பு, தோலுமாக மாறி மடிந்துள்ளன. அப்படியென்றால் அங்கு நிலவும் வறட்சியை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

14 வகை இனங்கள் பலி
இதுபற்றி அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் பென்னினா மாலோன்ஜா கூறுகையில், ‛‛நாட்டில் நிலவும் வறட்சியால் வனவிலங்குகளுக்கான உணவு பற்றாக்குறை, தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த பிப்ரவரி முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 205 யானைகள் செத்துள்ளன. யானை உள்பட 14 இனங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. யானைகள் தவிர 512 காட்டெருமைகள், 381 வரிக்குதிரைகள், 12 ஒட்டகச்சிவிங்கிகள், 51 எருமைகள் இறந்துள்ளன. அரிதான மற்றும் அழிந்து வரும் இனமாக கருதப்படும் கிரேவி வகையை சேர்ந்த 49 வரிக்குதிரைகளும் இறந்துள்ளன'' என்றார்.

உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை
கென்யா ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு ஏராளமான வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. தற்போதைய வறட்சியால் சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கென்யா அரசுக்கு அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் வகையில் கென்யா அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது சில இடங்களில் மட்டும் லேசாக மழை பெய்ய துவங்கி உள்ளது. இதுவும் போதிய அளவு இருக்காதாம். அதாவது வரும் மாதங்களில் நாட்டின் பெரும்பகுதிகளில் சராசரி அளவை விட குறைந்த அளவில் மட்டுமே மழை பதிவாகும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனால் நாட்டில் நிலவும் வறட்சியை சமாளிக்க கென்யா அரசு திட்டமிட்டு உள்ளது.

தண்ணீர் வழங்கும் அதிகாரிகள்
தற்போது வனவிலங்குகளில் பல இடங்களில் தண்ணீர், உணவுகள் வைக்கும் நடவடிக்கையை கென்யா அரசு முன்னெடுத்துள்ளது. மேலும் பல இடங்களில் அரசு அதிகாரிகள் வாகனங்களில் சென்று மயங்கிய நிலையில் கிடைக்கும் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கொடுத்து வருகின்றனர். கென்யாவை பொறுத்தமட்டில் வனவிலங்குகள் மிகவும் முக்கியமானவையாகும். ஏனென்றால் வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் பெரும் வருமானம் என்பது வனவிலங்குகள் சார்ந்த சுற்றுலாவை அடிப்படையாக கொண்டது. இதனால் வனவிலங்குகளை வறட்சியில் இருந்து காக்க வேண்டி கென்யா போராடி வருகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications