எலான் மஸ்க்கை வம்பிழுக்கும் சீனா.. சேட்டிலைட் ஆய்வு மையத்தை மோத வந்ததாம்..!
பீஜிங்: விண்வெளியில் உள்ள தங்கள் ஆராய்ச்சி நிலையத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேக் எக்ஸ் நிறுவன செயற்கைக் கோள்கள் இருமுறை மோத வந்ததாகவும், இதுகுறித்து ஐநா சபையின் விண்வெளி விவகாரங்கள் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளறிவிட்டுள்ளது.
Recommended Video
உலகின் பெரும் பணக்காரர்கள் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் விண்வெளி ஆராய்ச்சியில் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் ஆராய்ச்சியில் அவர் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
பலமுறை தோல்வி கண்டாலும் தற்போது மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனையில் எலான் மஸ்க் வெற்றி பெற்று வருகிறார். அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் மூலம் இதுவரை நூற்றுக்கணக்கான செயற்கைகோள்களை ஏவியுள்ளது. இன்னும் பல செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவத் தயாராக உள்ளது.

சீனா புகார்
இந்த நிலையில் விண்வெளியில் சீனா அமைத்துள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மீது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் இரு முறை மோத முயற்சித்ததாக விண்வெளி பாதுகாப்பு முகமை சீனா புகார் அளித்துள்ளது.

செயற்கைகோள்கள் மோத இருந்தது
ஆஸ்திரிய நாட்டின் வியன்னாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் விண்வெளி விவகாரங்கள் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும், ஸ்டார்லிங்க் நெட்வொர்க்கின் செயற்கைக்கோள்கள் கடந்த ஜூலை மற்றும் அக்டோபர் 21 ஆகிய இரு தினங்களில் சீன விண்வெளி ஆய்வு மையம் மீது மோத இருந்ததாகவும், ஆய்வு மையத்தின் தானியங்கி தற்காப்புக் கருவிகள் மூலம் நூலிழையில் விபத்து தவிர்க்கப்பட்டது என சீனா குற்றம் சாட்டியுள்ளது.

எலான் மஸ்க் மீது விமர்சனம்
இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்க மறுத்து விட்ட நிலையில் சீனா இந்த புகாரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது. இதையடுத்து எலான் மஸ்க் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது. எலான் மாச்கின் செயற்கைக்கோள்கள் அனைத்துமே அமெரிக்காவின் விண்வெளி போர் ஆயுதங்கள் என சீனாவைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அமெரிக்கா மீது குற்றச்சாட்டு
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ள அனுமதியால் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் பாதுகாப்புக்கு அமெரிக்கா அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது எனவும் அமெரிக்கா பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியான் கூறியுள்ளார்.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications