For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேஸ்புக், கூகுளின் தலை உருளுகிறது... ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு

பேஸ்புக், கூகுள் மற்றும் நெட்பிலிக்ஸ் ஆகிய சமூக வலைத்தளங்களின் மீது ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சிட்னி: பேஸ்புக், கூகுள் மற்றும் நெட்பிலிக்ஸ் ஆகிய சமூக வலைத்தளங்களின் மீது ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வலைத்தளங்கள் பலரது வேலையை பறித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் இந்த நிறுவனங்கள் மிகவும் அதிக அளவில் பொய்யான தகவல்களை மக்கள் இடையே பகிர்வதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனங்கள் பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறது.

இந்த வழக்கில் என்ன மாதிரியான தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கப்படலாம் என்பதால் இந்த நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் வழக்கு

ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் பிரபல தேடு பொறியான கூகுள் மீதும், சமூக வலைத்தளமான பேஸ்புக் மீதும், வீடியோ, படம் பார்க்கும் அப்ளிகேஷனான நெட்பிலிக்ஸ் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனங்கள் மிகவும் மோசமாக செயல்படுவதாகவும், மக்களிடம் நிறைய பொய்களை பரப்புவதாகவும் இந்த வழக்கில் தெரிவிக்கப்ட்டு இருக்கிறது.

கோபம் எதனால்

கோபம் எதனால்

பேஸ்புக், கூகுள் வந்த பின் ஆஸ்திரேலியாவில் மக்கள் புத்தகம் படிப்பதும், செய்தித்தாள்கள் படிப்பதும் குறைந்து இருக்கிறது. இதனால் செய்தி நிறுவனங்களுக்கு வந்த வருமானமும் குறைத்துள்ளது. மேலும் பேஸ்புக், கூகுள் போன்றவைகளில் நிறைய பொய்யான தகவல்கள் எளிதாக கிடைக்கிறது. இது ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.

பலரின் வேலை போனது

பலரின் வேலை போனது

மேலும் இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் பலரின் வாழ்க்கையே பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பல முக்கியமான பத்திரிக்கைகள் ஆள் குறைப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறது. இதன் காரணமாக நிறைய பேருக்கு வேலை போய் இருக்கிறது. சில ஆஸ்திரேலிய மீடியா நிறுவனங்கள் மொத்தமாக திவாலாகியது. இதன் காரணமாகவே அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

பேஸ்புக் சர்ச்சை

பேஸ்புக் சர்ச்சை

இதில் தீர்ப்பு இன்னும் 18 மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இது பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரிய பிரச்சனையாக உருவாக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே நெட் நியூட்ராலிட்டிக்கு எதிராக பேசியதால் பல நாடுகளில் பேஸ்புக் மீது எதிர்மறையான கருத்து உருவாகி உள்ளது. இந்தியாவிலும் பேஸ்புக் மீது இந்த பிரச்சனை காரணமாக நிறையாக புகார்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Facebook, Google face probe in Australia over fake news and articles. They will probably fine the social media services for the fake news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X