For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேஸ்புக்கில் அரசை விமர்சித்த 8 பேருக்கு ஈரானில் 123 வருட சிறைதண்டனை!

Google Oneindia Tamil News

தெஹ்ரான்: ஈரானில் அரசுக்கு எதிராக பேஸ்புக்கின் பிரச்சாரம் செய்ததாக 8 பேருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் சமூக வலை தளம் சர்வதேச அளவில் மக்களை ஒருங்கிணைக்கும் ஊடகமாக திகழ்கிறது. அதன் மூலம் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

இதுபோன்ற தகவல் பரிமாற்றம் ஈரானில் 8 பேருக்கு ஜெயில் தண்டனை பெற்று தந்தது. அவர்கள் அரசுக்கு எதிராக பேஸ்புக் மூலம் பிரசாரம் செய்ததாக புகார் செய்யப்பட்டது.

இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட 8 பேருக்கு தலா 7 முதல் 20 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் மொத்தமாக 123 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஈரான் தலைவர் அயாதுல்லா அலி காமெனி குறித்து தவறான தகவல்கள் மற்றும் அரசுக்கு எதிரான கருத்துக்களை பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கடந்த வாரம் தண்டனை அறிவிக்கப்பட்டதாகவும் அது உண்மைதானா என்றும் தெரியவில்லை. இந்த தகவலை பேஸ்புக்குக்கு எதிரான மற்றொரு இணைய தளம் வெளியிட்டுள்ளது.

English summary
This week, eight Iranian students and adults were slapped with jail sentences ranging from seven to twenty years in prison for posting Facebook messages deemed inflammatory by the Islamic government. Their fate elicited a “no comment” Thursday from the Menlo Park-based company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X