For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2013ல் அதிக நன்கொடை வழங்கிய அமெரிக்கர் ஃபேஸ்புக்கின் மார்க் ஜக்கர்பர்க்

By Siva
Google Oneindia Tamil News

சான் பிரான்சிஸ்கோ: 2013ம் ஆண்டில் அதிகம் நன்கொடை வழங்கிய 50 அமெரிக்கர்கள் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் முதலிடத்தில் உள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டில் அதிகம் நன்கொடை வழங்கிய 50 அமெரிக்கர்கள் பட்டியலை தி க்ரோனிக்கல் ஆப் பிலான்திரோபி தயார் செய்தது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 50 பேர் கடந்த ஆண்டு 7.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும் 2.9 பில்லியன் டாலர்கள் வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

இந்த பட்டியலில் யார், யார் எந்தெந்த இடத்தில் உள்ளனர் என்று பார்ப்போம்.

ஜக்கர்பர்க்

ஜக்கர்பர்க்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸில்லா சான் தான் கடந்த ஆண்டு அதிகம் நன்கொடை வழங்கிய அமெரிக்கர்கள் ஆவர். அவர்கள் 970 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் மதிப்புள்ள 18 மில்லியன் ஃபேஸ்புக் பங்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

நைக்கி

நைக்கி

நைக்கி நிறுவன தலைவர் பிலிப் நைட் மற்றும் அவரது மனைவி பெனிலோபி ஆரிகன் ஹெல்த் மற்றும் சயன்ஸ் ஃபவுன்டேஷன் பார் கேன்சர் ரிசர்ச்சுக்கு 500 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கி தாராளமாக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளனர்.

ப்ளூம்பர்க்

ப்ளூம்பர்க்

முன்னாள் நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பர்க் 452 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கி க்ரோனிக்கலின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலின்டா ஆகியோர் கடந்த ஆண்டு 181.3 மில்லியன் டாலர்களை விட அதிக அளவு நன்கொடை வழங்கியுள்ளனர். அவர்கள் ஏற்கனவே நன்கொடை வழங்குவதாக வாக்குறுதி அளித்த 3.3 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளனர். வாக்குறுதி அளித்து கொடுக்கும் நன்கொடை க்ரோனிக்கல் பட்டியலில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

வாரன் பஃப்பெட்

வாரன் பஃப்பெட்

சி.என்.என். நிறுவனர் டெட் டர்னர் மற்றும் பெர்க்ஷயர் ஹாதவே தலைவர் வாரன் பஃப்பெட் ஆகியோரும் தாங்கள் அளித்த வாக்குறுதியின்படி தாராளமாக நன்கொடை வழங்கியுள்ளனர்.

பணக்காரர்கள்

பணக்காரர்கள்

தாராளமாக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் பணக்காரர்கள். ஆனால் அதில் சிலர் அப்படி இல்லை. உதாரணமாக சியாட்டிலைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜாக் மெக்டொனால்ட் என்பவர் தான் இறந்த பிறகு 139 மில்லியன் டாலர்களை 3 என்.ஜி.ஓ.க்களுக்கு செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Facebook founder Mark Zuckerberg and his wife Priscilla Chan were the most generous American philanthropists in the year 2013. They donated 18 million shares of facebook stock valued more than $970 million.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X