For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வழுக்கி விழுந்தார் ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை சீனியர் புஷ்.. கழுத்து எலும்பு உடைந்தது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வீட்டில் வழுக்கி விழுந்ததில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் கழுத்து எலும்பு உடைந்து விட்டதாம். இந்தத் தகவலை அவரது செய்தி தொடர்பாளர் ஜிம் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் (91). இவர் மைனே பகுதியில் உள்ள கென்னிபங்க்போர்ட் இல்லத்தில் எதிர்பாராத விதமாக தவறிக் கீழே விழுந்தார். இதில் அவரது கழுத்து எலும்பு உடைந்தது.

Former President George H. W. Bush breaks neck bone in fall

தற்போது அவர் சிகிச்சைக்காக போர்ட்லாந்தில் உள்ள மைனே மெடிக்கல் செண்டரில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை செய்தி தொடர்பாளர் மட் பால் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலம் உயிர் வாழ்ந்து வரும் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அதேபோல், சமீபத்தில் தங்களது 70வது திருமண தினத்தைக் கொண்டாடி, அதிக ஆண்டுகள் தம்பதிகளாக இணைந்து வாழும் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் 41வது அதிபராக இருந்தவர் ஜார்ஜ் புஷ். ரீகன் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்தவர். பின்னர் இவர் அதிபரானார். இவரது மகன் ஜார்ஜ் புஷ்ஷும் அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர் தான்.

ஜார்ஜ் புஷ் விரைவில் குணமடைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனின் மகள் செல்சீ கிளிண்டன் டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

English summary
Former President George H. W. Bush has broken a bone in his neck after a fall in his home in Kennebunkport, Maine, his spokesman Jim McGrath confirmed via Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X