வெளிநாடுகளின் நிலக்கரி மூலமான அனல் மின் நிலையங்களுக்கான நிதி உதவியை நிறுத்த ஜி20 உச்சி மாநாடு முடிவு
ரோம்: வெளிநாடுகளின் நிலக்கரி மூலமாக மின் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையங்களுக்கான நிதி உதவியை 2021-ம் ஆண்டுக்குள் நிறுத்த ஜி20 உச்சி மாநாடு முடிவு செய்துள்ளது. இருப்பினும் ஜி20 நாடுகள் தங்களது உள்நாட்டில் நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாதது இந்தியாவுக்கு சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது.
ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் 16-வது 2 நாள் உச்சி மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவடைந்தது. இம்மாநாட்டின் நிறைவாக வெளியிடப்பட்ட ரோம் மாநாட்டு பிரகடன கூட்டறிக்கையானது கார்பன் சமநிலை, நிலக்கரி பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விவரித்துள்ளது.

அனல்மின்நிலையங்களுக்கான நிதி உதவி கட்
குறிப்பாக வெளிநாடுகளில் நிலக்கரி மூலமாக மின் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையங்களுக்கான நிதி உதவியை இந்த ஆண்டுக்குள் நிறுத்த ஜி20 மாநாடு தீர்மானித்துள்ளது. அதே நேரத்தில் உள்நாடுகளில் நிலக்கரி எடுத்து அதன் மூலமாக மின் உற்பத்தி செய்யப்படும் அனல் மின் நிலையங்களின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இலக்குகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை
சர்வதேச நாடுகளில் இந்தியாவும் சீனாவும்தான் நிலக்கரி மூலமாக அனல் மின் உற்பத்தியை அதிகம் சார்ந்திருக்கின்றன. இதனால் ஜி20 நாடுகளின் 16-வது உச்சி மாநாட்டு முடிவுகள் இந்தியா, சீனாவுக்கு பாதகமானவை இல்லை என்றே பார்க்கப்படுகிறது. பிற நாடுகளைப் போல மரபுசாரா எரிசக்தி துறைக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களை மாற்றிக் கொள்வதற்கு கால அவகாசத்தை ஜி20 மாநாடு வழங்கியிருப்பதாகவும் கருதப்படுகிறது.

கொரோனா தடுப்பூசிகளுக்கு விரைவாக அனுமதி
இதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜி20 உச்சி மாநாட்டின் அறிக்கை விவரிக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக அளவிலான பொதுநலன் நடவடிக்கையாக ஜி20 மாநாடு தீர்மானித்திருக்கிறது. கொரோனா தடுப்பூசிகளுக்கான அனுமதியை உலக சுகாதார நிறுவனம் விரைந்து வழங்கும் வகையில் அதன் கட்டமைப்பை வலுப்படுத்தவும் ஜி20 நாடுகள் தீர்மானித்திருக்கின்றன.

பருவநிலை மாற்ற பேரழிவு தடுப்பு
மேலும் பருவநிலை பேரழிவைத் தடுக்கும் வகையில் 2050-க்குள் ஜீரோ கார்பன் உமிழ்வுநிலையை அடைவது எனவும் ஜி20 மாநாட்டின் ரோம் பிரகடனம் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. சர்வதேச சராசரி வெப்ப நிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்கு கீழே கொண்டு செல்வதற்காக அனைத்து நாடுகளும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கிறது இந்த ரோம் பிரகடனம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications