For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு !

By Karthikeyan
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் ஆண்டுதோறும் உலகில் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில்
இந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலை டைம் இதழின் ஆசிரியர் குழு தேர்வு செய்துள்ளது.

German chancellor Merkel named Time's 'Person of the Year'2015

ஐரோப்பிய கண்டத்தில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் சிரியாவில் இருந்து வெளியேறும் அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்தல் உள்ளிட்ட பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட மெர்கலின் தலைமைப்பண்பை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒரு அரசியல் தலைவர் தன் நாட்டு மக்களிடம் கேட்க அஞ்சும் அளவை விட அதிகமாக கேட்டு பெற்றுள்ளார் ஏஞ்சலா மெர்கல் என புகழாரம் சூட்டியுள்ளது டைம் இதழ். இந்த ஆண்டுக்கான போட்டியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் பாகிஸ்தானின் மலலா ஆகியோர் இருந்தனர்.

இவர்கள் தவிர இந்தியாவின் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அமெரிக்க அதிபர் ஒபமா, ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபுபக்கர், ஹிலாரி கிளின்டன், நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானின் மலாலா உள்ளிட்ட 58 பேர் போட்டியில் இருந்தனர். இவர்களிலிருந்து எட்டு பேர் இறுதி செய்யப்பட்ட நிலையில், டைம் இதழின் ஆசிரியர் குழு ஏஞ்சலா மெர்கலை இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்து இன்று அறிவித்தது.

English summary
Time Magazine has named German Chancellor Angela Merkel as its "Person of the Year".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X