For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப்ளூடூத், வைபைக்கு பிள்ளையார் சுழி போட்ட "பாட்டி"... டூடுள் போட்டு கொண்டாடும் கூகுள்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கணினி தொழில்நுட்பங்களான ப்ளூ டூத், வை பை மற்றும் ஜிபிஎஸ் ஆகிய தொழில்நுட்பத்திற்கெல்லாம் தொடக்கமாக விளங்கிய உலகின் அழகிய பெண் என்று வர்ணிக்கப்பட்ட ஹெட்டி லாமர் பிறந்தநாளை இன்று கூகுள் டூடுள் இட்டு கொண்டாடி வருகின்றது.

அவரின் ஃப்ரிகென்சி ஹோப்பிங் (frequency hopping) என்கிற கண்டுபிடிப்பு தான் தற்போதைய ஸ்பெக்ட்ரம் கம்யூனிகேஷன் டெக்னாலஜியின் தொடக்கம்.

1914 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் வியன்னாவில் பிறந்த ஹெட்டி லாமர், 1930களில் ஐரோப்பிய சினிமாவில் அறிமுகமாகி பின்பு ஹாலிவுட்டிலும் பிரபலமானார்.

அறிவியல் பெண்மணி:

அறிவியல் பெண்மணி:

மிகவும் கவர்ச்சியாய் நடித்து எதிர்ப்பும் அதே சமயம் வரவேற்பும் பெற்ற இவர் "அறிவியல் பெண்மணி" என்றும் கொண்டாடப்பட்டார். 19 வயதில் ஆஸ்திரியாவின் மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிப்புக்கு பின்:

நடிப்புக்கு பின்:

இவரின் பேரில் அறக்கட்டளையும் இருக்கிறது. இவர் முதலில் நடிகை ஆகி பிரபலமடைந்தவர். அதன் பின்னரே விஞ்ஞானியாக மாறி சாதனை படைத்தவர்.

உள்ளங்கைக்குள் அடங்கிய உலகம்:

உள்ளங்கைக்குள் அடங்கிய உலகம்:

அவருடைய இந்த ஷேர் செய்யும் டெக்னாலஜியால்தான் தற்போது உலகமே உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. எதுவும் சாத்தியம் என்ற நிலையை ஏற்படுத்தியது இவரது கண்டுபிடிப்பின் மகத்துவம் ஆகும்.

கொண்டாடும் கூகுள்:

கொண்டாடும் கூகுள்:

இன்று இவரது 101 ஆவது பிறந்த நாள். அதை கூகுள் அற்புதமான வீடியோவுடன் அதன் டூடுல் பக்கத்தில் கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Renaissance woman Hedy Lamarr could not be accused of living a dull life. Even before fleeing her loveless marriage to a Nazi arms dealer to become a Hollywood star, Lamarr had captured international attention as the first female actor to simulate an orgasm in a non-pornographic film.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X