For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாத்தான் மீது கல்லெறிய அரபாத் மலையில் குவிந்த ஹஜ் யாத்ரீகர்கள்

By Siva
Google Oneindia Tamil News

மெக்கா: ஹஜ் யாத்திரையின் இறுதி சடங்கான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சிக்காக யாத்ரீகர்கள் அரபாத் மலையில் குவிந்துள்ளனர்.

இஸ்லாத்தின் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற உலக முஸ்லீம்கள் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர். சவுதியில் உள்ள புனித மெக்கா, மதினா நகர்களில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறும்.

Haj pilgrims gather at Mount Arafat

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செய்ய உலகம் முழுவதிலும் இருந்து 20 லட்சம் யாத்ரீகர்கள் சவுதியில் குவிந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 1.36 லட்சம் பேர் ஹஜ் யாத்திரைக்கு மெக்கா சென்றுள்ளனர்.

யாத்ரீகர்கள் மெக்கா நகரில் தொழுகையை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மினா நகருக்கு கிளம்பிச் சென்றனர். அங்கு சில சடங்குகளை முடித்த பிறகு அவர்கள் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்க அரபாத் மலைக்கு சென்றுள்ளனர்.

இன்று சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சிக்கு யாத்ரீகர்கள் வந்தபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 800 பேர் பலியாகினர், 900 பேர் காயம் அடைந்தனர். உண்மையில் 2 ஆயிரம் பேர் பலியானதாகவும், சவுதி உண்மையை மறைத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த ஆண்டு அது போன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

English summary
20 lakh pilgrims have gathered in Mount Arafat to symbollically throw stones at the devil on monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X