விமானத்தில் ஹெட்போன் பேட்டரிகள் வெடித்து பெண்ணின் முகம், கழுத்தில் காயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிட்னி: சீனாவில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில் ஹெட்போன் பேட்டரிகள் வெடித்து பெண் ஒருவரின் முகம், கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இளம் பெண் ஒருவர் சீனாவின் பெய்ஜிங் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு கடந்த மாதம் 19ம் தேதி விமானத்தில் சென்றுள்ளார். அப்போது அவர் தனது ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே தூங்கிவிட்டார்.

Headphone Batteries Explode On Flight: Woman suffers burns

திடீர் என ஏதோ பயங்கர சப்தத்துடன் வெடித்தது கேட்டு பயணிகள் திடுக்கிட்டனர். பார்த்தால் அந்த இளம்பெண்ணின் ஹெட்போனில் இருந்த பேட்டரிகள் வெடித்துள்ளன.

Headphone Batteries Explode On Flight: Woman suffers burns

இது குறித்து அந்த பெண் கூறுகையில்,

என் ஹெட்போன் பேட்டரிகள் வெடித்து என் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே ஹெட்போனை எடுத்து தரையில் போட்டேன். அது தீப்பிடிருந்தது. என் முகம், கழுத்து, கைகளில் தீக்காயம் ஏற்பட்டது என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A woman suffered burns to her face and hands after her headphone batteries exploded during a flight from China to Australia.
Please Wait while comments are loading...