For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டேஞ்சர்! அழிவை நோக்கி ஹைவே-இல் போகிறோம்.. எச்சரித்த குட்டரெஸ்! அப்படியே சீனா பக்கம் திரும்பி! பரபர

Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்தில் நடைபெறும் பருவநிலை மாற்ற மாநாட்டில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் என்பது உலக நாடுகளுக்கு மிக பெரிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக முயன்றால் மட்டுமே இதை தடுக்க முடியும்.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஐநா சார்பில் பருவநிலை மாநாடு நடைபெறுகிறது. இந்தாண்டு எகிப்தில் உள்ள ஷா்ம்-அல்-ஷேக் நகரில் பருவநிலை மாநாடு நடைபெறுகிறது.

எரிபொருட்களை இனி நம்பக்கூடாது.. உடனே நிறுத்திக்கோங்க.. மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் ஐநா எரிபொருட்களை இனி நம்பக்கூடாது.. உடனே நிறுத்திக்கோங்க.. மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் ஐநா

 பருவநிலை மாநாடு

பருவநிலை மாநாடு

இதில் 198 நாடுகளைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். எகிப்து பருவநிலை மாற்ற மாாட்டில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உலகம் நரகத்தை நோக்கி ஹைவே-இல் விரைவாக சென்று கொண்டு இருப்பதாக தெரிவித்தார். விரைவில் இதை தடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாதிப்புகள் மாற்ற முடியாதவையாகிவிடும் என்றும் எச்சரித்தார்.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்த கூட்டத்தில் அன்டோனியோ குட்டரெஸ் மேலும் பேசுகையில், "நாம் பருவநிலை மாற்றத்தின் நரகத்தை நோக்கில் ஹைவே-இல் மின்னல் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறோம். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாதிப்புகளை மாற்ற முடியாமலே போகிவிடும். பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை இப்போதே நம்மால் பார்க்க முடியும். இனியும் அவை ஏற்படுத்தும் இழப்பு மற்றும் சேதத்தையும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

 பணக்கார நாடுகள்

பணக்கார நாடுகள்

பருவநிலை மாற்றத்தை தடுக்க தெளிவான நடவடிக்கைகள் தேவை. எந்த காலகட்டத்திற்குள் எந்தெந்த நடவடிக்கைகளை எடுத்து முடித்தாக வேண்டும் என்பதை அனைத்து நாடுகளும் முடிவு செய்ய வேண்டும். அனைத்து நாடுகளுமே பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றன. எனவே பணக்கார நாடுகளும் ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

 அமெரிக்கா, சீனா

அமெரிக்கா, சீனா

2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்த வேண்டும். 2030இல் முடியவில்லை என்றால் 2040க்குள் நிச்சயம் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலுமாக கைவிட வேண்டும். கிரீன்ஹவுஸ் வாயுக்களை அதிகம் வெளியிடும் அமெரிக்கா மற்றும் சீனா பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் பருவநிலை மாற்றத்தை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.

அழிவு

அழிவு

மனிதகுலத்தின் கண் முன்னே இப்போது ஒரு தேர்வு தான் உள்ளது.. ஒன்று இதற்கு ஒத்துழைத்து பருவநிலை மாற்றத்தை தடுக்க வேண்டும். அப்படியில்லை என்றால் இதிலேயே சிக்கி அழிந்துவிட வேண்டும். இது பருவநிலை மாற்றத்திற்கான ஒற்றுமை ஒப்பந்தமாக இருக்க வேண்டும்.. அப்படியில்லை என்றால் நாம் அழிய போவது உறுதி" என்று அவர் பேசினார்.

 உலக தலைவர்கள்

உலக தலைவர்கள்

இந்த ஆண்டு எகிப்தில் நடக்கும் இந்த ஐநா பருவநிலை மாநாட்டில், பல்வேறு மோசமான பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து ஆய்வாளர்கள் களமிறங்குவார்கள். பாகிஸ்தானில் வெள்ளம் முதல் ஆப்பிரிக்காவில் வறட்சி வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசனை நடைபெறுகிறது. மேலும், பருவநிலை மாற்ற்ததை தடுக்க எடுக்கும் உடனடி நடவடிக்கை குறித்தும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
UN Secretary General Antonio Guterres warned that world is on a highway to climate hell: COP27 UN climate summit in Egypt UN chief Speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X