For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் எந்த இந்திய மொழி ஜாஸ்தி பேசப்படுது தெரியுமா? இந்தியாம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆய்வு ஒன்றின்படி அந்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்களால் பேசப்படும் இந்திய மொழியாக இந்தி விளங்குகின்றதாம். கிட்டத்தட்ட 6.5 லட்சம் பேர் இந்தி பேசுகின்றனர். அங்கு தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 1.9 லட்சமாக உள்ளது.

அமெரிக்காவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த சமூக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கிடைத்த எண்ணிக்கையின் அடிப்படையில் கிட்டத்தட்ட 60 மில்லியன் மக்கள், தங்கள் வீடுகளில் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகள் பேசுகின்றனர்.

வீட்டிலும் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை சுமார் 25 மில்லியன்களாக இருக்கிறது. வீடுகளில் ஆங்கிலத்தைத் தவிர்த்துப் பேசும் மற்ற மொழிகளில் ஸ்பானிய மொழி 37.4 மில்லியன் மக்களோடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

அடுத்தடுத்த இடங்கள்:

அடுத்தடுத்த இடங்கள்:

அடுத்தடுத்த இடங்களில் சீன மொழி (சுமார் 2.9 மில்லியன்), பிரெஞ்சு (1.3 மில்லியன்), கொரியன் (1.1 மில்லியன்), ஜெர்மன் (1.1 மில்லியன்), வியட்நாம் (1.4 மில்லியன்), அராபிய மொழி (924,573), டாகாலோக் (1.6 மில்லியன்) மற்றும் ரஷிய மொழி (879,434) ஆகியவை இருக்கின்றன.

இந்திதான் அதிகம்:

இந்திதான் அதிகம்:

இந்திய மொழிகளில், இந்தி, 6.5 லட்சம் பேரோடு அதிகம் பேசுபவர்களில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக, சுமார் 4 லட்சம் மக்கள் உருது பேசுகின்றனர். 3.7 லட்சம் பேர் குஜராத்தியும், 73,000 பேர் மராத்தியும் பேசுகின்றனர். பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழிகளை 2.5 லட்சம் மக்கள் பேசுகின்றனர்.

மற்ற மொழிகளின் கலவை:

மற்ற மொழிகளின் கலவை:

அஸ்ஸாமி 1300 பேராலும், காஷ்மீரி 1700 பேராலும் பேசப்படுகிறது. ஒரியா மொழியை 5,000-க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துகின்றனர். பிஹாரியை 600 பேரும், ராஜஸ்தானியை 700 பேரும் பேசுகின்றனர். நேபாளியை 94,000க்கும் மேற்பட்டோர் பேச, சிந்தியை சுமார் 9,000 பேர் பேசுகின்றனர்.

தமிழும், தெலுங்கும்:

தமிழும், தெலுங்கும்:

அமெரிக்காவில் வசிக்கும் 2.5 லட்சம் லட்சம் பேர், வீட்டில் தெலுங்கு பேசுகின்றனர். தமிழ் மொழி சுமார் 1,90,000 பேரால் பேசப்படுகிறது. மலையாளத்தை சுமார் 1,46,000 பேர் பேச, கன்னட மொழி சுமார் 48,000 பேரால் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Hindi has emerged as the largest Indian language spoken in the US, with nearly 6.5 lakh people speaking it, according to the latest Census data.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X